பதம் பார்க்கும் பெட்ரோல்... மீண்டும் பஸ்களை நாடும் மக்கள்..!

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 05:33 pm
people-who-are-looking-for-busses-again

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால்  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் லாபம் அடைந்துள்ளது என்றால் நம்ப மாட்டீர்கள் தானே? ஆனால், அதுதான் உண்மை.

வொய்ட் போர்டு, கிரீன் போர்டு, எல்லோ போர்டு என்று பேருந்துகளை எப்போது, சென்னை மொட்ரோபாலிடன் போக்குவரத்து கழகம் ரகம் ரகமாக பிரித்ததோ, அப்போதே மக்களிடம் இருந்து அந்நியப்பட ஆரம்பித்தது சென்னை பேருந்துகள். பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்திய அந்த கணமே மாநகர பேருந்துகளை புறந்தள்ளி மக்கள்  மாற்று வழிகளை தேடி பயணித்தனர்.  ரயில் மற்றும் ஷேர் ஆட்டோ அவர்களின் ‘சாய்ஸ்’ ஆக இருந்தது.

‘பீக் அவர்ஸ்’ எனப்படும் அலுவலக வேலை நேரங்களில் ஷேர் ஆட்டோக்களுக்கு கிராக்கி அதிகம். நினைத்த இடத்தில் ஏறலாம், இறங்கலாம் என்பதோடு  மணிக்கணக்கில் காத்திருக்கும் அவஸ்தையும் கிடையாது. முக்கிய இடங்களுக்கு பயணிகளை  ஏற்றிச்செல்ல பிரதான முனைகளில் ஷேர் ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கும் இந்த  சூழலில், ’ஷேர் ஆட்டோக்களும் ‘ரேட்’டை அதிகரித்து விட்டன. 5 ரூபாய் வரை ஷேர் கட்டணம்  அதிகரித்து விட்டது.

இதனால், மாநகர பேருந்துகளை நோக்கி மக்கள் இடம் பெயரத் தொடங்கி விட்டனர். கடந்த சில தினங்களில் தினந்தோறும் ஒரு லட்சம் பயணிகள் மாநகர  பேருந்துகளில் கூடுதலாக பயணிக்கின்றனர். இதனால், சென்னையில் ஓடும் 3 ஆயிரத்து 439 பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் வொய்ட் போர்டு பேருந்துகளில், குறைந்த பட்ச கட்டணம்- 5 ரூபாய் என பேருந்துகளின்  முகப்பில், அச்சடித்து ஒட்டி உள்ளது மாநகர போக்குவரத்து கழகம்.    
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close