டி.டி.வி.தினகரனுக்கு என்னாச்சு..? மனநல சிகிச்சைக்கு நமது அம்மா வலியுறுத்தல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 26 Sep, 2018 05:57 am
namadhu-amma-magazine-emphasizes-on-t-t-v-dinakaran-s-mental-health

டி.டி.வி.தினகரன் நல்ல மனோதத்துவ மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது என புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழ் கிண்டலடித்துள்ளது.

அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழில் அவ்வப்போது அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கடுமையாக தாக்கி கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தினகரனுக்கு என்ன ஆச்சு என்கிற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், 90 சதவிகிதம் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் அடிக்கடி சொல்வதைப் பார்த்தால் அவர் நல்ல மனோதத்துவ மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

ஆரம்பத்திலிருந்தே அவர் இப்படி ஜோக் அடித்துக் கொண்டிருக்கிறார். நான் தான் எடப்பாடியாரை முதலமைச்சராக்கினேன்’ என்கிறார் ஒரு சமயம். பிறகு எடப்பாடியார் அரசு அடுத்த வாரம் கவிழ்ந்து விடும் என்றார். ஒருவாரம் சென்ற பின்னர் ஒரு மாதத்தில் கவிழும் என்றார். ஒரு மாதம் கழித்துக் கேட்டபோது மூன்று மாதத்தில் கவிழும் என்றார். இப்படிச் சொல்லிச்சொல்லியே அவருக்கு வெட்கம் வந்துவிட்டது போலும். 
இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்வதையே நிறுத்தி விட்டார் பாவம் அவர்.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிச் சொல்லிச்சொல்லி கட்சிக்காரர்களை ஏமாற்ற முடியும். இப்போது 90 சதவீதம் தொடர்கள் தன்னுடன் இருக்கிறார்கள் என்கிறார். இப்படித்தான் அவர் வீட்டில் இருக்கின்ற சில எடுபிடிகள் கூட 90 சதவிகித தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்கின்றனர். தினகரன் இப்படி அடிக்கடி ஏதாவது சொல்லி உளறிக் கொட்டுவதை பார்க்கும்போது அவருக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்ற சந்தேகம் அவருடன் இருப்பவர்களுக்கே ஏற்பட்டு இருக்கிறதாம்.

எதற்கும் அவர் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரைப் பார்ப்பது நல்லது’’ என புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழ் தினகரனை வார்த்தைகளால் தாக்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close