ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க துணிச்சல் இருக்கிறதா?- அ.தி.மு.க அமைச்சரை தாக்கும் ராமதாஸ்

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 02:05 pm
ramadoss-condemned-about-admk-minister-speech

அ.தி.மு.க பற்றி பேசினால் நாக்கை அறுப்போம்" என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊழல் செய்தவர்களுக்கு ஓட்டுப் போட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவு தான் இது. அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போன்றது தான் இதுவும்!

அ.தி.மு.க ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு - அப்படியா... மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தெம்பும், துணிச்சலும் ஊழல் அமைச்சருக்கு உண்டா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close