அழைப்பிதழில் பெயர் இருந்தால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை: தினகரன் அதிரடி பேட்டி!

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 02:23 pm
i-won-t-participate-in-mgr-function-says-ttv-dinakaran

'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எனது பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே' என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாகபட்டினத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், " முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கோழைத்தனத்தை மறைக்கவே வீரர் போன்று பேசுகிறார். தைரியம் இருந்தால் அ.தி.மு.க, தி.மு.க இடைத்தேர்தலில் ஜெயித்து காட்டட்டும். திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? 

அ.தி.மு.க அமைச்சர்களை அ.ம.மு.கவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. அதற்கு அரசியலை விட்டே போய்விடலாம். பா.ஜ.க, தி.மு.க தவிர வேறு கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி இருக்கும். சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக நான் பா.ஜ.கவை எதிர்க்கவில்லை, எனது இயல்பே அதுதான். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எனது பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே. எனவே நான் விழாவில் பங்கேற்க மாட்டேன்" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close