இழவு வீட்டில் பணம் சம்பாதிக்கும் அதிமுக நிர்வாகிகள்... உதயகுமாருக்கு உறியடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 27 Sep, 2018 08:39 am
party-cadres-ripping-off-minister-udhay-kumar

தடாலடி அரசியலுக்கு பெயர் போனவராகி வருகிறார் அமைச்சர் உதயகுமார். அவரது திருமங்கலம் தொகுதியில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் சைக்கிள் சுற்றுப்பயணம், உதவி விழாக்கள் என ஜமாய்த்து வருகிறார் உதயகுமார். அவரிடமே ஆட்டையை போட்டு வருகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.
வருவாய் துறை அமைச்சரான உதயகுமார் அவரது, திருமங்கலம் தொகுதியில், அ.தி.மு.க.,வினர்  குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், அவர்களது குடும்பத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  இந்நிலையில் கடந்த முன்ன்று மாதத்தில், 30க்கும் மேற்பட்டவர்களுக்கு, அமைச்சர் தரப்பில், உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

 இதில், கட்சி நிர்வாகிகள், 'தில்லாலங்கடி' வேலை செய்திருக்கிறார்கள். அதாவது, ஊருக்குள் யார் இறந்தாலும், அவர்களை  அ.தி.மு.க.,வினர் எனச் சொல்லி, அமைச்சரிடம் உதவித்தொகை கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள்.  இழவு வீட்டுக்கு உதவித்தொகை போனதும், பின்னாடியே இந்த நிர்வாகிகள் போய், அதில் பாதியை வாங்கிவிடுகிறார்களாம்.  'இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது' என, சீனியர் நிர்வாகிகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close