கருணாஸுக்கு களி... சித்திர குப்தனுக்கு சிம்மாசனம்... எடப்பாடி அதிரடி!

  பா.பாரதி   | Last Modified : 27 Sep, 2018 03:41 am
karunas-to-shake-up-chitra-gupta-is-a-political-thriller-edappadi-action

டி.டி.வி.தினகரன் முகாமில் முக்குலத்தோர் திரண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கருணாஸின் குரலும் ஈ.பி.எஸ்-க்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பி.எஸ் மோதலும் முட்டிக்கொண்டு நிற்க, முக்குலத்தோரின் தயவை வேண்டி நிற்கிறார் எடப்பாடி.. இந்த நிலையில்தான் முக்குலத்தோரன சித்திர குப்தனை களமிறக்க காய் நகர்த்துகிறார் எடப்பாடி! 

தமிழக மக்களிடம் இரு கழகங்களின் கொள்கைகளை கொண்டு சேர்த்ததில், இரண்டு  தூண்களுக்கு முக்கிய  பங்கு உண்டு. முதலாம் தூண் சினிமா. இரண்டாம் தூண், ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் நான்காவது தூணான ஊடகங்கள். ஆனால், இரு கழகங்களுமே , 50 ஆண்டுகளுக்கும் மேலாக  சினிமா துறையினருக்கு நன்றி பாராட்டி அவர்களை  மக்கள் பிரதிநிகளாக்கி இருக்கிறதே தவிர, ஊடகவியலாளர்களுக்கு எலும்பு துண்டு போல் சில சலுகைகளை கொடுத்து, அவர்களை  ஊறுகாயாகவே  பயன்படுத்தி வந்திருக்கின்றன.

தொலை தூரத்துக்கும் கழகங்களின் பெயர், கொடி, லட்சியம் என அனைத்து அம்சங்களையும் தூவியதில் சினிமாக்காரர்களுக்கு சற்றும் குறைவில்லாத சேவை ஆற்றியவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால், ‘பாப்புலாரிட்டி‘ என்ற ஒற்றை விஷயத்துக்காக டஜனுக்கும்  மேற்பட்ட  சினிமாக்காரர்களை எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என அழகு பார்த்த கழகங்கள் , தங்களை உயர்த்திய ஊடக  ஆட்களை இந்த விஷயத்தில் கண்டு கொண்டதேயில்லை. எனினும், ஊடகங்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்ட  முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா ,  முதல் முறையாக ரபி பெர்ணார்டு என்கிற ஊடகவியலாளரை மாநிலங்கவைக்கு அனுப்பி வைத்து , ஊடக வியலாளர்களின்  ஏக்கத்தை தணித்தார்.
இதன் தொடர்ச்சியாக மிகவும் ‘தாமதமாக’ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மருது கணேஷ் என்கிற பத்திரிகையாளரை திமுக களம் இறக்கியது. அவர் தோற்கடிக்கப்பட்டது தனிக்கதை.

ஜெயலலிதா பாணியில் அடுத்து வரும் தேர்தல்களில் ஊடக  ஆட்களுக்கு இடமளிக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல்.
அவர்களில் ஒருவர் மருது அழகு ராஜ். சித்ரகுப்தன் என்கிற பெயரில் கவிதைகளை வரைபவர். இப்போது ஆளுங்கட்சியின் நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு முன் நமது எம்ஜிஆர் இதழின் ஆசிரியர். டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இப்போது நமது அம்மாவில் ஐக்கியமானவர். 

டி.வி.விவாத மேடைகளில் அதிமுக சார்பாக பங்கேற்கும் இவர், அதிமுக  செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மை காலமாக அதிமுக மேடைகளிலும் மருது அழகுராஜை பார்க்க முடிகிறது.அதிமுக மேடைகளில் அவரை முகம் காட்டச்செய்வது, அவரை வேட்பாளருக்கும் திட்டத்தின் முதல்படி என்கிறார்கள் லாயிட்ஸ்  சாலை வட்டாரத்தில்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close