மனம் மாறிய ஸ்டாலின்.. மீண்டும் திமுகவில் அழகிரி..!?

  பா.பாரதி   | Last Modified : 27 Sep, 2018 03:42 am
stalin-changed-mind-again-back-in-the-azhagiri

மேடைகளில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்  வீரா வேசமாக பேசுகிறாரே தவிர உள்ளுக்குள் அழகிரியால் உதறலுடன் இருப்பதாகவே  சொல்கிறார்கள், அறிவாலய வட்டாரத்தில்.

கருணாநிதி தலைவராக இருந்த போது அவருக்கு ஒரே எதிரிதான்  இருந்தார். அது, ஜெயலலிதா. பிற கட்சிகள் அனைத்தும் கருணாநிதியோ அல்லது  ஜெயலலிதாவையோ  அண்டி  பிழைக்க வேண்டிய  நிலையில் தான்  இருந்தன. ஆனால் நிலைமை இப்போது தலை கீழ். டி.டி.வி.தினகரன் என்றைக்கு  தனி இயக்கம் கண்டு, திமுக-வை ‘டெபாசிட்’ இழக்கச்செய்தாரோ அன்றே   ஸ்டாலின் சில விஷயங்களை உணர்ந்திருக்க வேண்டும்.’’ குறைந்த பட்சம், தான் கருணாநிதி அல்ல’’ என்பதையாவது அவருக்கு உணர்த்தி இருக்க வேண்டும்.

திமுக-வுக்கு சரி சமமான பலத்தில், இன்றைக்கு அதிமுக., அ.ம.மு.க. மற்றும் ரஜினி ஆட்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் திமுக மூன்றாம், நான்காம் இடத்திலேயே உள்ளது. கன்னியாகுமரியிலும் அதே நிலை. தூத்துக்குடி, விருதுநகர் போன்ற  மாவட்டங்களில் சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருப்பதால் கட்சியின் கட்டமைப்புக்கு சேதாரம் இல்லை. 

இந்த சூழலில் தான் அண்ணன் அழகிரியுடன் யுத்தத்தை நடத்தி வருகிறார், ஸ்டாலின். இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரு தொகுதிகளிலும் அழகிரி- திமுகவை கவிழ்த்து விடுவார் என திமுகவினர் நம்புகிறார்களோ இல்லையோ கருணாநிதி குடும்பத்தார், உறுதியாக நம்புகிறார்கள்.
இதையடுத்து அண்மையில் நடந்த குடும்ப கிச்சன் கேபினெட்டில், அழகிரி விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. வழக்கம் போல் முரசொலி செல்வம் தரப்பு அழகிரியின் அவசியத்தை எடுத்து சொல்ல, அவரை கட்சியில் சேர்க்க அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டாராம், ஸ்டாலின்.
அழகிரிக்கு திருவாரூரில் சீட் கொடுப்பதோடு, தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியையும் கொடுக்க சம்மதித்து விட்டாரம் ஸ்டாலின்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close