அரசு தனிமனித உரிமைகளை  ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க கூடாது! - கமல்ஹாசன் காட்டம் 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 07:39 am
makkal-eedhi-maiyam-leader-kamalhassan-interview

அரசு தனிமனித உரிமைகளை அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்ப்பதும், அவர்களை நோட்டமிடுவதும் அது செய்யக்கூடிய ஒன்றே இல்லை. எப்பொழுதும் மக்களை கண்காணிக்கும் அரசாக இருக்கக்கூடாது என்று ஆதார் பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது:

ஒடிசா முதல்வரை சந்தித்த நோக்கம் என்ன?

புதிய புதிய பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்தியாவில் பல நல்ல முன்னோடி திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அதிகாரிகளின் ஆலோசனைப்படி நல்ல திட்டங்களை நிறைவேற்றுகிறார். மற்ற மாநிலங்கள்பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அதிகாரிகளின் ஆலோசனைக்கு செவி சாய்த்து பேரிடர் காலங்களில் அவர்கள் கையாண்ட விதம் மற்ற மாநிலங்களை பொறாமைப்பட வைத்துள்ளது. அந்த நல்ல திட்டங்களை ரசிகனாக பார்த்து வியந்து பாராட்டி, சில ஆலோசனைகளை பெற்று வந்தேன்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளதே?

திறமைக்கு பதவி உயர்வு கொடுக்கணும் அதை ஜாதிய அடிப்படையில் கண்டிப்பாக மறுக்கக்கூடாது.

ஆதார் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்புப் பற்றி?

ஆதார் திட்டம் தனி மனித உரிமைகளை மீறியதாக இருக்கக்கூடாது. அரசு மக்களுக்கு நல்ல திட்டங்கள் எல்லாம் போற்றுதலுக்குரியது என்றாலும், தனிமனித உரிமைகளை அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்ப்பதும், அவர்களை நோட்டமிடுவதும் அது செய்யக்கூடிய ஒன்றே இல்லை. எப்பொழுதும் மக்களை கண்காணிக்கும் அரசாக இருக்கக்கூடாது.

மக்கள் நலம் சார்ந்த விஷயங்களில் மக்கள் நீதிமய்யம் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் மட்டுமே போராட்டம் நடத்துகிறதே?

இல்லை, நாங்கள் செய்துக்கொண்டுத்தான் இருக்கிறோம். எப்படி போராடவேண்டுமோ அப்படி போராடிக்கொண்டுத்தான் இருக்கிறோம், சுட்டுத்தள்ளும் வரை போராட்டம் நடத்தணும்னு அவசியம் இல்லை. அது இல்லாமல் உயிர்ச்சேதம் இல்லாமல் சில போராட்டங்களை வென்றெடுக்க முடியும். சாதாரணமாக கிராம பஞ்சாயத்து குறித்த விழிப்புணர்வை கொண்டுச்சென்றது மக்கள் நீதி மய்யம் என்றால் அது மிகையாகாது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி?

இன்னும் உயர்வு வரப்போகுது, சாதாரண பொருட்களின் விலை எல்லாம் ஏறத்தான் போகிறது. இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மாற்றியே ஆகவேண்டும். இவ்வாறு கமல் பேட்டி அளித்தார்
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close