ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிக்க வைக்கத் திட்டம்... குமுறும் சசிகலா குடும்பம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Sep, 2018 06:41 am
plans-to-pin-jayalalitha-death-on-sasikala-s-family

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாருக்கு மீண்டும் ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது.

 அதில், 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவரங்களை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சிவகுமாரை விசாரணைக்காக அழைப்பது இது ஐந்தாவது முறை. ஏதாவது ஒரு வகையில் சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா மரணத்தில் சிக்க வைக்க வேண்டும் என எடப்பாடி அரசு திட்டம் போடுகிறது. அது நடக்காது. காரணம், எங்ககிட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கு. எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர்கள் என எல்லோரும் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்துதான் வந்தார்கள்.

மருத்துவமனையில் இருந்தபோது அவர்களை மீறி குடும்பத்தினர் என்ன செய்துவிட முடியும்? ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் முதல்வராக இருந்தாலும் அதற்கு முன்பு நடிகை. சாதாரணமாகவே மேக் அப் இல்லாமல் யாரையும் அவர் சந்திக்க மாட்டார். அப்படிப்பட்டவர் எப்படி மருத்துவமனையில் இருக்கும்போது மற்றவர்களைச் சந்திப்பார்? நோயாளி அனுமதி இல்லாமல் எப்படி அவரைச் சந்திக்க அனுமதிக்க முடியும்? இதெல்லாம் எந்த கோர்ட்டுக்குப் போனாலும் நிற்காது.

எங்ககிட்ட சிகிச்சை விவரங்கள் தெளிவாக இருக்கு. எத்தனை முறை கூப்பிட்டாலும் அதைக் கொடுக்கத் தயாராக இருக்கோம்..’ என்று சொல்லி வருகிறார்களாம் சசிகலா குடும்பத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close