சன் பிக்சர்ஸால் அரசியல் தயக்கம்... புது ரூட்டில் ரஜினி!

  பா.பாரதி   | Last Modified : 28 Sep, 2018 06:46 am
delay-due-to-sun-pictures-rajini-on-the-new-way

அரசியல் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிப்பதற்கான காலமும், நேரமும் கனிந்து விட்டதாக கருதுகிறார், ரஜினி.

இப்போது அவரது முழுக்கவனமும் ‘பேட்ட’ படத்தின் மீது தான். டார்ஜிலிங்,டேராடூன் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட அந்தப்படம், இப்போது லக்னோவில் இறுதி வடிவம்  பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரும் முன்பாக தனது கடைசி படமாக இதுவே இருக்க வேண்டும் என்று விரும்பினார் ரஜினி.

சில நிர்ப்பந்தங்களால், மற்றொரு படத்தில் நடிக்க வேண்டிய சூழலுக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். பேட்ட படத்தில்  திகட்ட திகட்ட அரசியல் ‘பஞ்ச்’ டயலாக்குகளை அள்ளி விட வேண்டும் என்பது அவரது  அவா. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சி என ஒன்று விடாமல் துவம்சம் செய்து காலி செய்வது அவரது ‘பிளான்’. ஆனால், படத்தை  தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டியதால் ரஜினியின்  எண்ணம்  ஈடேறவில்லை.

இந்த நிலையில் தான் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்ட கதையுடன் ரஜினியை அணுகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கதையும், கதையோடு சேர்த்து பின்னப்பட்ட சம்பவங்களும் ரஜினிக்கு பிடித்து போயிற்று. நொடியும் தாமதிக்காமல் ஓ.கே.சொல்லி விட்டார் ரஜினி.
அரசியல் படம் என்பதால் மற்ற தயாரிப்பாளரை  சங்கடப்படுத்த விரும்பவில்லை ரஜினி. இந்த படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார்.


‘பேட்ட’ சூட்டிங் அக்டோபரில் முடிந்து விடும். அதன் பின் முருகதாஸ் படம்  ஆரம்பம். இந்த படத்தின் சூட்டிங் சமயத்திலேயே கட்சி பெயரை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close