’விஸ்வாச’ அஜித்... ரஜினியுடன் விரைவில் ரசிகர்களுக்கு தரிசனம்..!

  பா.பாரதி   | Last Modified : 28 Sep, 2018 06:47 am
viswaasam-ajith-darshan-for-fans-soon

திரைப்படங்களில் அதிரடி புருஷர்களாக உருவகிக்கப்படும் அஜீத்தும்,விஜய்யும் நிஜத்தில்  பரம சாதுக்கள். கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் சினிமாவில் நுழைந்த இருவரும்-ரஜினிக்கு அடுத்த படியாக திரளான  ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள்.

தனது ரசிகர்களை விஜய் அடுத்த கட்டத்துக்கு (அரசியல்) நகர்த்தி கொண்டிருக்க , அஜீத்தோ ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார். ஆனாலும் அவர் படங்கள்  ரிலீஸ் ஆகும் சமயத்தில், தீபாவளி பண்டிகையாகவே அதனை கொண்டாடி தீர்க்கிறார்கள் அஜீத்  ரசிகர்கள். கடந்த 10 வருடங்களாகவே பொது வெளியில் தலை காட்டுவதை தவிர்த்து வருகிறார் தல. பட விழ, நட்சத்திரக் கலை விழா என எந்த நிகழ்ச்சியிலும் அவர் முகம் காட்டுவதில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அஜீத், கடைசியாக தலை காட்டியது ராஜாஜி ஹாலில். கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். தல, தலை மறைவு  வாழ்க்கை நடத்துவதால் அவரது ரசிகர்கள் சோர்வடைந்து இருப்பது நிஜம். இதனை அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.


இதனால், ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க முடிவு செய்துள்ளார், அஜீத். பொங்கலுக்கு வெளியாகும்  அவரது விஸ்வாசம் படத்தின்  டீசர் வெளியீட்டு விழா விரைவில் அமர்க்களமாக நடைபெற உள்ளது.

நேரு உள் விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் அஜீத் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். விழாவின் சிறப்பு விருந்தினர் ரஜினிகாந்த் என்பது கூடுதல்  தகவல். ரஜினிக்கு அரசியலில்  மிகவும் நெருக்கமான ஆர்.எம்.வீரப்பனின் மருமகன் சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘விஸ்வாசம்’ என்பது  குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close