கூவாத்தூர் ரகசிய வீடியோ மிரட்டல்.. சிறையில் ’வதை’படும் கருணாஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Sep, 2018 06:51 am
kavattur-secret-video-threats-in-jail-to-karunas

கூவாத்தூர் ரகசிய வீடியோவை கேட்டு எடப்பாடி பழனிசாமியால் சிறையில் எம்.எல்.ஏ கருணாஸ் வதைக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இதுகுறித்து நியூஸ்டிஎம் சார்பில், கருணாஸின் ஆதரவாளர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘ கடந்த ஓராண்டாகவே கருணாஸுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மறைமுக யுத்தம் நடந்து வருகிறது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை அரசியல் ரீதியாக ஒடுக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தார் முதல்வர். கருணாஸ் எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி திருவாடனை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. மாவட்டத்தின் உயரதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி முதல் கீழ் நிலை அதிகாரிகள் வரை கருணாஸுக்கு யாரும் ஒத்துழைக்கக்கூடாது என கோட்டை மூலமாக உத்தரவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், தொகுதி சார்ந்த எந்தப்பணிகளையும் கருணாஸால் செயல்படுத்த முடியவில்லை. இதனை, எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தார் கருணாஸ். ஆனால், அவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

 

இதனால் நொந்துபோன கருணாஸ், சீனியர் அமைச்சர்கள் இருவரைச் சந்தித்து, ‘’முதல்வர் என்னை எதிரியாக நினைத்தால் நானும் அவரை எதிரியாகக் கருத வேண்டியதிருக்கும். என்னை அழிக்க நினைத்தால் கூவாத்தூரில் நடந்த ஆதாரங்களை வெளியிடுவேன்’’ எனக்கூறி எச்சரித்துள்ளார். இதனை அந்த இரண்டு சீனியர் அமைச்சர்களும் எடப்பாடியிடம் தெரித்துள்ளனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. மாறாக அந்த சீனியர் அமைச்சர்கள், கருணாஸிடம், ‘’ எடப்பாடி பழனிசாமி உங்கள் மீது கோபமாக இருக்கிறார். நீங்கள் வைத்திருப்பதாகக் கூறும் ஆதாரங்களை அவரிடம் தந்தால் அவர் சமாதானம் ஆகலாம்’’ எனக்கூறினர். ஆனால், அந்த ஆதாரங்களைத் தர கருணாஸ் மறுத்துவிட்டார். 

இதன் பிறகு கருணாஸ் ஆதரவாளர்களான எங்கள் மீது காவல்துறையை ஏவி பல வழக்குகள் புனையப்பட்டன. அவருடன் நெருக்கமாக இருக்கும் மாநிலச் செயலாளர் தாமோதர கிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகளை பதிந்து வந்தனர். இவர்களைத் தூக்கி குண்டாஸில் கைது செய்தால்தான் கருணாஸ் அடங்குவார் என நினைத்த எடப்பாடி காவல்துறையை ஏவினார். இதனை எதிர்த்து டெல்லியில் தேசிய மனித உரிமை ஆனையத்திலும் கருணாஸ் தரப்பு முறையிட்டது. இருந்த போதும் எங்கள் தரப்புய் மீது பொய் வழக்கு போடுவது நீடித்தது. 

அ.தி.மு.க ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, சசிகலாவின் திட்டப்படி கூவாத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதிலும், டீலிங் பேசுவதிலும் கருணாஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. தனது முக்குலத்தோர் புலிப்படையினரை வைத்து போயஸ் கார்டன் முதல் கூவத்தூர் ரிசார்ட் வரை பாதுகாப்புகளை செய்திருந்தார் கருணாஸ். யார் யாருக்கு என்ன செய்யப்பட்டது? எந்தெந்த வகையில் பேச்சு வார்த்தைகள் நடந்தன? கூவத்தூரில் எடபாடியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என பல விஷயங்கள் எங்களது அமைப்பினருக்குத் தெரியும்.

இதற்கான வீடியோ ஆதரங்கள் எங்களிடம் உள்ளன. அந்த வீடியோக்கள் பொது வெளியில் வெளியானாலோ, அல்லது தி.மு.க தரப்பில் சிக்கினாலோ முதல்வரான பின் சசிகலாவிற்கே தண்ணீர் காட்டிய எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்தப்பயம்தான் எடப்பாடிக்கு கருணாஸ் மீது கோபத்தை ஏற்படுத்தி வந்தது. அந்த வீடியோவை கைப்பற்றுவதற்காகத்தான் கருணாஸை சுற்றி இருந்த வழக்கறிஞர்களை வளைத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன் பிறகு கருணாஸை உள்ளே தள்ளத் திட்டமிட்டு இருந்தார் எடப்பாடி. அதற்குள் அவசரப்பட்டு கருணாஸே மாட்டிக்கொண்டார். இப்போது வேலுர் சிறையில் இருக்கும் கருணாஸிடம் அந்த வீடியோக்களைக் கேட்டு சித்ரவதை செய்து வருகின்றனர்’’என்கிறார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close