ஓ.பி.எஸ் தொகுதியில் மகனை களமிறக்கும் எடப்பாடி... அதிரடி அரசியல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Sep, 2018 06:52 am
ops-s-son-to-take-over-his-constituency

அ.தி.மு.க அரசியல் வரலாற்றில், பணிவிற்கும், பதவிக்கும் இடையே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம். 

இந்த நிலையில்தான் அவரது சொந்தத் தொகுதியான போடியில் ஓ.பி.எஸ்-க்கு எடப்பாடி மூலம் ஆப்பி வைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போடி தொகுதியில் அடுத்து அவரது மகன் ரவீந்திர நாத்தை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து போடி தொகுதி ரத்தத்தில் ரத்தங்கள் நம்மிடம், ‘’அம்மா இருக்கும்போது ஆண்டிப்பட்டி தொகுதியை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகவே வைத்திருந்தார். ஆனால், சமுதாய மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற ஓ.பி.எஸ் போடி தொகுதியைக் கண்டுகொள்ளாமல் உள்ளார். அடிக்கடி சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் அவர், கட்சிக்காரர்களின் குடும்ப விழாக்களில் பங்கேற்பதோடு கிளம்பி விடுகிறார்.அடுத்த முறை போடி தொகுதியில் களமிறங்கப்போவதில்லை என்கிற முடிவோடு இருக்கிறார் எனக்கூறப்படுகிறது. கன்னியாகுமரி பக்கம் அவர் களமிறங்க திட்டமிட்டுள்ளார்’’ என்கிறார்கள். 

                                  துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுடன் ரவீந்திர நாத்

அதெப்படி என அவர்களிடம் கேட்டால், ‘’கன்னியாகுமரி பக்கம், நிற்கத் திட்டமிட்டுள்ள அவர், தனது மகனான ரவீந்திரநாத் குமார போடி தொகுதியில் நிற்க வைக்க ஏற்கெனவே காய் நகர்த்தி வருகிறார். ஓ.பி.எஸ் ஆதரவாளரான செங்கை.ராமச்சந்திரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி அதற்கான வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது. முதல் கட்டமாக 121 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து சமூக வலைத்தளங்களில் ஆளுக்கு 5 ஆயிரம் பேர்களை நண்பர்களாக வைத்து பாஸிட்டாவான தகவல்களைப் பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். போடி தொகுதியில் ஓ.பி.எஸ்-க்கு இருக்கிற அதிருப்தி, ஒ.பி.எஸ் மகனுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டுதான் முதல்வர் எடப்பாடி கூட இளைஞர் , இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளராக இருந்த ரவீந்திர நாத்தை அம்மா பேரவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளார். 

இதற்கு முக்கிய காரணமே, டி.டி.வி.தினகரன் தேனிக்கு வந்தபோது, பெரியகுளம் பகுதியில் ரவியின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தினகரனை மிரளச்செய்தனர். அத்தோடு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை சொந்தப்பொறுப்பில் எடுத்து ரவி சிறப்பாக செய்து முடித்தார். 

இது ஒருபுறமிருக்க, தலைநகரான சென்னையில் இருந்து கொண்டே தனது ஆதரவாளர்களுக்குப் பதவிகளை வாங்கிக் கொடுத்து அரசியலில் அடுத்த நிலைக்குச் சென்றாகவேண்டும் என்பது ஓ.பி.எஸின் முடிவு. அதற்குச் சின்ன உதாரணம், திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கத்திற்கு அமைப்புச் செயலாளர் பதவி வாங்கிக் கொடுத்ததோடு, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்பாளரக நிறுத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார்’’ என்கின்றனர்.

 
இதுகுறித்து அ.தி.மு.க தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், ‘’அண்ணன் ஓ.பி.எஸை படிக்காத சிலர், அவர் மீது கிணற்றுப் பிரச்ணையை கிளப்பினார்கள். அந்தக் களங்கம் இப்போதும் தீரவில்லை. அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மகன் ரவியின் செயல்பாட்டால் மறைந்து வருகிறது. இதனால், போடி தொகுதி முழுவதும் மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் ரவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. ஆகையால் ரவி அடுத்த முறை போடியில் களமிறங்குவது உறுதி. ஓ.பி.எஸ் அண்ணன் தொகுதி மாறி நின்றால் தனது அப்பாவுக்காக வேலை பார்த்து அப்பாவை ஜெயிக்க வைப்பார்’’ என்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close