அ.தி.மு.க ஐடி விங்கிலும் அதிகார யுத்தம்.. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மல்லுக்கட்டு!

  பா.பாரதி   | Last Modified : 28 Sep, 2018 02:37 pm
the-battle-war-on-the-aiadmk-the-ops-eps-teams-are-dumped

உலகமே செல் போனுக்குள் சுருங்கி விட்ட இந்த கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு கட்சியின் கொள்கையை  கொண்டு  சேர்ப்பது, காலத்தின் கட்டாயம்.

இதனை தெளிவாக புரிந்து கொண்ட ஜெயலலிதா, கடந்த 2014-ம் ஆண்டே அ.தி.மு.க-வுக்கு என தனி தகவல் தொழில் நுட்ப பிரிவை (ஐடி விங்க்) உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சியின் செயல்பாடுகளை கொண்டு சென்றார். இந்த ஐ.டி விங்கின் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சிங்கை ராமச்சந்திரன். கோவை மாவட்டத்துக்காரர். முன்னாள்  எம்.எல்.ஏ, கோவிந்தராஜின் மகன். ராமச்சந்திரனுக்கு பெயர் வைத்ததும், அவருக்கு திருமணம் செய்து வைத்ததும் ஜெயலலிதா தான்.


 

சிங்கை ராமச்சந்திரன்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க உடைந்த போது ராமச்சந்திரன் ஓ.பி.எஸ் அணிக்கு சென்று விட்டார். இதனால், அதிமுக-வின் ஐடி விங் செயலாளராக மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை  நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்- ஈபிஸ் இணைந்ததும் ஐடி விங்க்  பொறுப்பை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ராமச்சந்திரன் பக்கம் நின்றார், ஓபிஎஸ். ’ராமச்சந்திரனுக்கு அந்த பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. எனவே ராமச்சந்திரனே செயலாளர் பதவியில் நீடிக்க வேண்டும் ‘’என்று அவர் வாதிட, ஈபிஎஸ் அதனை ஏற்றுக்கொண்டார்.

ராஜ் சத்யன்

ஆனால், ராஜ் சத்யன் தரப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ராமச்சந்திரனுக்கு போட்டியாக, தாங்களே உண்மையான அ.தி.மு.க ஐடி விங்க் என்பது போல் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வர மேலிடம், மண்டடையை பிய்த்து கொள்ளாத குறை.கடந்த சில மாதங்களாக, தி.மு.க மற்றும் தினகரன்  தரப்பு ஐடி விங்க் பொதுமக்களை, வேகமாக நெருங்கி வரும் நிலையில், அதிமுக ஐடி விங்க் சகோதர யுத்தத்தில் சிக்கி இருப்பது, எடப்பாடியை  கவலை கொள்ளச்செய்துள்ளது.


இந்த விஷயத்தில் பஞ்சாயத்து பேசி தீர்க்கும் பொறுப்பு பொன்னையனிடம்  ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவரும் பேச்சை தொடங்கி இருக்கிறார். தீர்வு ஏற்படுமா?

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close