கூவத்தூர் வீடியோ பேரம்... கருணாஸை கைவிட்ட ஸ்டாலின் ரகசியம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Sep, 2018 03:10 pm
secret-video-bargain-m-k-stalin-s-secret-to-abandoning-karunas

கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒப்புக்காக டி.டி.வி.தினகரன் ஓர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பதின் பின்னணியில் ஒரு ரகசியம் அடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் நெருங்கிய கருணாஸ் சில காரியங்களை முடித்துக்கொண்டு திடீரென தி.மு.க தலைவர் ஸ்டாலினை தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோருடன் சென்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், அதன் பிறகு எடப்பாடியிடம் இருந்து விலகினாராம் கருணாஸ். கூவாத்தூரில் நடந்த  சில ரகசிய வீடியோக்கள் தி.மு.க தரப்பிடம் சில கோடிகளுக்கு பேரம்பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.

கூவத்தூர் சொகுசுவிடுதியில் பல நாட்கள் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு அனைத்துவிதமான வசதிகளும் வழங்கப்பட்டதாம். அங்கு துணை நடிகைகளும் அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கான பணம் பாதிதான் போய் சேர்ந்ததாகவும் அப்போதே தகவல் வெளியானது. எம்.எல்.ஏ-க்கள் சிலர் துணை நடிகைகளிடம் ‘ நெருக்கமாக’ இருந்த வீடியோ பதிவு கருணாஸிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கெனவே அ.தி.மு.க மீது அதிருப்தியில் இருக்கும் பொது மக்கள், அந்த வீடியோவை வெளியிட்டால் இன்னும் கொதிப்படைவார்கள் என்ற வகையில் பேரம் பேசப்பட்டதாகக் கூறுகிறார்கள். 

ஆனால், அப்படி ஒரு கீழ்த்தரமான அரசியல் தேவையில்லை என்று ஸ்டாலின் மறுத்துவிட்டார் என்கிறார்கள். கருணாஸுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டால் கணிசமாக இருக்கும் நாடார், கொங்கு வேளாளர் சமுதாயத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கருணாஸ் விவகாரத்தை ஸ்டாலின் கைவிட்டதாகச் சொல்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close