திருப்பரங்குன்றம் இன்னொரு ஆர்.கே.நகரா..? கலக்கத்தில் தி.மு.க நிர்வாகிகள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Sep, 2018 05:35 am
another-r-k-nagar-dmk-executives-in-disbelief

இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில், நாளொரு கவனிப்பும், பொழுதொரு பட்டுவாடாவும் நடந்து வருகிறது. 

அ.தி.மு.க தரப்பில் 296 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அவர்களில் 3 பேருக்கு ஒரு இன்சார்ஜ் என்கிற கணக்கில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, பகுதி, கிளை, ஒன்றிய, நகர, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, இரண்டு ரவுண்ட் பட்டுவாடாவை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதே போல், தொகுதி பொறுப்பாளர் என்கிற முறையில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரும், நிர்வாகிகளுக்கு பட்டுவாடா செய்து வருகிறார். இது தவிர, வாக்காளர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 50 கோடி ரூபாயை அங்கே அதிமுக தரப்பு இறக்கி விட்டிருப்பதால் தொகுதியே செழிப்பாக இருக்கிறது. ஏற்கெனவே டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பாகவும் பட்டுவாடா படு ஜோராக நடந்து வருகிறது. 

ஆனால், தி.மு.க பணத்தை இதுவரை இறக்கவில்லை. பணம் செலவு செய்ய வேண்டாம் என திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம். இதனால், நொந்துபோயிருக்கும் கழக உடன்பிறப்புகள், ’ஆர்.கே.நகரைப்போல இங்கும் கோட்டைவிட்டு விடுவோமோ’ எனப்புலம்பி வருகிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close