பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை நயன்தாரா..!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Sep, 2018 05:35 am
actress-nayanthara-to-be-nominated-as-bjp-candidate

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடையே பிரபலமான முகங்களை தங்கள் கட்சி வேட்பாளர்களாக பல தொகுதிகளில் களமிறக்க திட்டமிட்டுள்ளது பாஜக. 

கேரளத்தில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை பாஜக வேட்பாளராகக் களமிறக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக மோகன் லால் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தத் தொகுதியில் வழக்கமாக காங்கிரஸ் சார்பாக சசிதரூர் நின்று சில முறை வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீது தற்போது அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் சந்தேக மரண வழக்கு இருப்பது பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல் டெல்லியில் நடிகர் அக்‌ஷய் குமாரையும், பஞ்சாப், குருதாஸ்பூரில் நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி தியோல் களமிறங்க வழி வகுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், மும்பையில் மாதுரி தீட்சித், என மக்களிடையே பிரபலமான முகங்களை நிற்க வைப்பதன் மூலம் எதிர்க்கட்சி வேட்பாளர்களை முறியடித்து விட முடியும் என பாஜக திட்டம் வகுத்து வருகிறது. 

இதேபோல் நாடு முழுவதும் அந்தந்த தொகுதிகளில் பிரபலமானவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்க பாஜக பட்டியல் தயாரித்து வருகிறது. அதேவேளை, இந்தத் திட்டம் பாஜக-வுக்கு பாதகமாக அமைவதற்கும் வாய்ப்புண்டு. அரசியல் களத்தில் அனுபவமுள்ள கட்சி நிர்வாகிகள் இந்தப் பிரபல வேட்பாளர்களைக் களமிறக்குவதால் உள்குத்து வேலைகளில் ஈடுபட்டு தோற்கடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 
ஏற்கெனவே பாஜகவில் நடிகை ஹேமமாலினி, மேற்கு வங்கத்தில் நடிகை ரூபா கங்குலி, நடிகர் பரீஷ் ராவல், நடிகர் அனுபம் கெர், நடிகை கிரோன் கெர், நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் எம்.பி.,யாக இருந்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்... தமிழகத்தில் இது சாத்தியமா..?

 
தமிழகத்தில் நடிகர் நடிகர் நெப்போலியன் தி.மு.க-விலிருந்து ஒதுங்கி பாஜக-விறகு மாறிய பிறகு மௌனமாக இருந்து வருகிறார். தமிழக அரசியலில் பாஜக கங்கை அமரனை முன்னிறுத்தியது. ஆனாலும், அவர் பின் வாங்கி விட்டார். பாஜக வலுவாகக் காலூன்ற ரஜினியின் தயவை நாடியது. அவரும் கூட மதில்மேல் பூனையாக நின்று வருகிறார். இதனையடுத்து விஷாலையும், நடிகை நயன்தாராவையும் தங்களது வேட்பாளராக்க பாஜக கொக்கி போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து நயன்தாரவின் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள், ‘’நயன்தாராவிற்கு அரசியல் ஆசை இருக்கிறது. அதனால்தான் அவர், தனது படங்களை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் அமைத்துக் கொண்டு வருகிறார். இதனை உணர்ந்து கொண்ட பாஜக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நயன்தாராவிற்கும் வயதாகி வருவதால், இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி 2019 தேர்தலில் பாஜக சார்பாக களமிறங்குவார். தமிழக பா.ஜ.க முகமாக இனி அவர் இருப்பார்’’ என்கிறார்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close