வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2018 08:25 am
karunas-released-from-vellore-prison

முதல்வர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியற்காக 8 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ-வும் நடிகருமான கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப் பட்டார். 

வேலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவருக்கு 2 வழக்குகளில் ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் இன்று காலை வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், ஐ.பி.எல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிற்கான, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் அவர் தினமும் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப் பட்டுள்ளது. 

வெளியில் வந்த கருணாஸ், "எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு வெளியில் வருவேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதவளித்த முக்குலத்தோர் உயிர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close