சபரிமலை தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2018 08:41 am
pon-radhakrishnan-about-sabarimala-verdict

சபரிமலை கோவிலுக்கு 10 முதல் 59 வயது பெண்கள் போகக் கூடாது என்ற தடை இருந்தது. அங்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.  

இது குறித்தத் தீர்ப்பை நேற்று உச்சநீதி மன்றம் அளித்தது. அதில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை அளித்தார் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா. 

இது குறித்து தற்போது கருத்துத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 

"பாரம்பரியமாக சில விஷயங்களை சபரிமலை கோவிலில் கடைப்பிடித்து வந்தார்கள். பக்தர்களுக்கும், பாரம்பரியத்தை கடைப்பிடித்தவர்களுக்கும், இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close