பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2018 09:42 am
mgr-century-closing-ceremony-banners-disturbing-public

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நாளை சென்னையில் நடக்கிறது. இதற்காக நூற்றுக்கணக்கான பேனர்கள் சாலைகளில் வைக்கப் பட்டுள்ளன. 

நாளை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெறும் இந்த விழாவுக்காக, கிரீன்வேஸ் சாலையிலிருந்து சைதா பேட்டை வரை பேனர் மயமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் அண்ணாசாலை இந்த பேனர்களால் திணறுகிறது. 

சாலையின் இருபுற நடைப்பாதையை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையில் நடக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். இது வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தலைவலியைத் தந்துள்ளது. 

உயர்நீதிமன்ற விதியையும் மீறி ஆளுங்கட்சியினர் பேனர்களை வைத்து, அதை யாரும் சேதப் படுத்தி விடாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது. இன்னும் நிறைய பேனர்களை வைப்பதற்கான வேலைகளும் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.  

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close