விமானத்தை கடத்த முயற்சித்தார்களா விடுதலைப்புலிகள்..? சிணுங்கும் சிரிசேனா... மறுக்கும் டி.ஆர்.பாலு..!

  பா.பாரதி   | Last Modified : 29 Sep, 2018 06:22 pm
ltte-tries-to-kidnap-the-plane-disobedient-sirisena-refuse-t-r-balu

இலங்கையில் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டு  அதிபர் சிறிசேனா அமெரிக்காவில் அதிரடி தகவலை  வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சிறிசேனா, நியூயார்க் நகரில் சிங்களர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவரது பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. அவரது பேச்சின் சாரம் இது: ‘’2009ஆம் ஆண்டு இலங்கையில் உள் நாட்டுப்போர் உச்சத்தில் இருந்தபோது, விடுதலைப்புலிகள் சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி கொழும்பு நகரின் முக்கிய இடங்களை குண்டு வீசி அழிக்க திட்டமிட்டனர். அப்போது அதிபர் ராஜபக்க்ஷேயும், பிரதமர் விக்ரம நாயக்காவும் நாட்டில் இல்லை. நான் அப்போது ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்தேன்.

விடுதலைப்புலிகளுக்கு பயந்து முக்கிய தலைவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியே போய்விட்டனர். நானும் கூட கொழும்பில் இல்லை. கொழும்பு நகருக்கு வெளியே அடிக்கடி இடத்தை  மாற்றிக்கொண்டு இருந்தேன். இந்த தாக்குதல்  திட்டம் எனக்கு நன்றாக தெரியும்’’ எனக் கொழுதிப்போட்டார்.

 

ஆனால், அவரது கருத்தை திமுக முன்னாள்  மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மறுத்துள்ளார். ‘’இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்திய மண்ணில் இருந்து விமானத்தை கடத்தும் முயற்சி ஒரு போதும் நடந்திருக்காது. விடுதலைப்புலிகள் அப்படி ஒரு திட்டத்தை  தீட்டவில்லை. இது முழுக்க முழுக்கப் பொய்’’ என்று சிறிசேனாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close