’பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...’ வம்பிழுக்கும் தி.மு.க.. அசராத அ.தி.மு.க!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Oct, 2018 11:19 am
admk-ministers-troll-dmk-dmk-ready-to-attack

முன்பை விட, இப்போது அதிமுகவும், திமுகவும் மேடைகளில் காரசாரமாக மோதி வருகின்றன. 

தி.மு.க.விற்கு எதிராக அடக்கியே வாசித்து வந்த அ.தி.மு.க அமைச்சர்கள் தற்போது தடாலடி காட்டி வருகின்றனர். அ.தி.மு.க நடத்திய தி.மு.க எதிர்ப்புக் கூட்டங்களில் பேசிய தமிழக அமைச்சர்கள், ‘நாக்கை வெட்டுவேன், ஜெயலலிதா ஆவி பழிவாங்கும்...’ என்றெல்லாம் பேசி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்குப் போட்டியாக தி.மு.க சார்பில், அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 124 இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் பலரின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட ஊழல் பட்டியலை தி.மு.க தயார் செய்துள்ளதாம். அமைச்சர்களின் அறியப்படாத பக்கங்களை, இந்தக் கூட்டங்களில் பேசவிருக்கும் தி.மு.க பேச்சாளர்கள் சொல்லப் போகிறார்களாம். ஆனாலும், அச்சப்படுவதாக இல்லை அ.தி.மு.க அமைச்சர்கள்.

காரணம், பாஜக இப்போது அ.தி.மு.க-வை கூட்டணிக்கு நெருங்கி வருகிறது. அத்தோடு, இடைத்தேர்தலில் தி.மு.க பின் வாங்கும் நிலையில் இருப்பதை அதிமுக உணர்ந்துள்ளது. ’’மாபெரும் கட்சியான தி.மு.க இடைத்தேர்தலுக்கே அஞ்சினால் அதன் எதிர்காலம் என்னவாக இருக்கும்..? பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்’ என்கிற கதைதான் என கமெண்ட் அடிக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.  அதனால், இன்னும் என்னென்ன மாதிரியான வார்த்தைப்போர்கள் மூலப்போகிறதோ என கவலையில் இருக்கிறது அரசியல் களம்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close