கருணாஸின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க சபாநாயகர் நோட்டீஸ்..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Oct, 2018 03:02 pm
notices-to-slash-karunas-s-m-l-a-post

பதவியை பறிக்க திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ்.  திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசியதாக கடந்த மாதம் 23ஆம் தேதி கருணாஸை காவல் துறை கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.  ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ்,  தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் தனபாலை,  அமைச்சர்களான சி.வி.சண்முகம்,  தங்கமணி, அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்துப் சந்தித்துப் பேசினர்.

அப்போது, கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வருக்கு எதிராகப் பேசியது குறித்து விளக்கம் கேட்டு, கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர். அதற்கு முன்னதாக ஆளுநரிடம் மனு அளித்த 18பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் 3பேர் மீதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, கடந்த பிப்ரவரி மாதம் தினகரனை சந்தித்து அவருக்கு ஆதரவளித்தார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close