எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா... பூரிப்பில் எடப்பாடி... கடுப்பில் பாஜக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 03:17 am
m-g-r-century-festival-edappadi-happy-bjp-upset

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சென்னையே குலுங்கும் அளவுக்கு நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி படம் மட்டுமே இருந்தது. துணை முதல்வர் பன்னீர் படம் மிஸ்ஸிங். விழா முடியும் வரை சற்று இறுக்கமான முகத்துடன்தான் பன்னீர் அமர்ந்திருந்தார். அவர் எடப்பாடியை அதிகமாகப் புகழவில்லை. பட்டும் படாமல் பெயரை மட்டும் சொல்லிவிட்டுப் போனார். மற்ற எல்லோருமே எடப்பாடியையும் புகழ்ந்து தள்ளினார்கள்.

ஜெயலலிதா பாணியில் எல்லோரும் தன்னைப் புகழப் புகழ அதை உன்னிப்பாகக் கவனித்துச் சிரித்தபடியே இருந்தார் எடப்பாடி.
வந்த கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி மகிழ்ச்சியாகி இருக்கிறார். ‘’நாம வாங்கன்னு அழைப்பு விடுத்து வந்த கூட்டம் இது. எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. மறுபடியும் எப்போ தேர்தல் வந்தாலும் நாம ஆட்சியைப் பிடிச்சிடுவோம். எம்.ஜி.ஆர். மேலயும் அம்மா மீதும் வைச்ச அதே நம்பிக்கையை மக்கள் நம்ம மீதும் வெச்சிருக்காங்க...’ என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் எடப்பாடி.

இதனிடையே, எம்.ஜி.ஆர். விழாவுக்கு வந்த கூட்டம் பா.ஜ.க-வை கடுப்பாக்கியிருக்கிறது. எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என டெல்லியிலிருந்து தமிழக பாஜக தலைவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அவர்களோ, ‘அது எடப்பாடிக்கு வந்த கூட்டம் இல்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டம்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளக்கத்தைக் கேட்டும் டெல்லி பாஜக சமாதானம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close