உறுப்பினர் சேர்க்கை... கணக்கு தப்பியதால் கலக்கத்தில் கமல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 07:04 pm
party-member-admission-kamal-fear

கிராம சபை கூட்டம் நடத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

நேற்று உத்திரமேருரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கப் போயிருந்தார். இப்படி அவர் போகும் கிராமம்தோறும் கூடும் மக்கள் தங்களது பிரச்னைகளை பேசியதைவிட, கமலை நேரில் பார்க்கத்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் பேசியிருக்கிறார் கமல்.

அப்போது, ‘நான் கவனித்த வரை இங்கே வந்த கூட்டம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரைப் பாக்கவோ, அவங்க பிரச்னைகளை சொல்லவோ கூடவில்லை. எல்லோரும் நடிகர் கமல்ஹாசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வந்த கூட்டம்தான். இதே கூட்டங்களுக்கு நான் வரவில்லை என்றால் எவ்வளவு பேரு வந்திருப்பாங்க. அதுதான் அவங்க பிரச்னைகளைச் சொல்ல வரும் உண்மையான கூட்டம்.

இன்னொரு பக்கம் இவங்ககிட்ட பிரச்னையை சொல்லி என்ன ஆகப் போகுது, என்னத்த மாற்றிடுவாங்க என்று அவங்க யோசிப்பாங்க. அதுவும் நியாயமான விஷயம்தான். அதனால, நாம கூட்டம் நடத்தி அவங்களோட குறைகளை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடனுக்குடன் அதற்கு ஏதாவது தீர்வைக் கொடுக்கணும். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தாங்க... கேட்டாங்க... போய்ட்டாங்கன்னு இருக்கக் கூடாது. இதை இதை செய்து கொடுத்தாங்க என்றிருக்கணும். அப்படி இருந்தால் மட்டுமே நம்ம பக்கம் இருக்கும் கூட்டம் அதிகமாகும்.

கட்சி ஆரம்பிச்சபோது வந்தக் கூட்டம் இப்போ அப்படியே இருக்கா என்று உங்களை நான் கேட்டாலும் உங்ககிட்ட பதில் இருக்காது. அது இல்லை என்பது எனக்கும் தெரியும். எதையோ எதிர்பார்த்து வந்த எல்லோரும் ஓடிட்டாங்க. தமிழ்நாடு முழுக்க நாம ஆன்லைனில் உறுப்பினர்களை ஆரம்பித்தோம். அதுல எவ்வளவு பேரு வந்தாங்க? ஏன் இன்னும் அந்த முழுமையான பட்டியலை நம்மால் உறுதிப்படுத்த முடியலை? எல்லோரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். ஆளாளுக்கு லேப்டாப் முன்னாடி உட்கார்ந்து எனக்கு கணக்கு சொல்றாங்க. லேப்டாப் கணக்கை வெச்சுகிட்டு என்ன செய்ய முடியும்.?’ என்று கேட்டாராம் கமல்.

நிர்வாகிகளிடம் பதில் இல்லை. ‘ஆட்களை எப்படி சேர்க்கலாம் என்று யோசிங்க. ஆளாளுக்கு `நாம உட்கார்ந்து பேசுறதால எதுவும் மாறாது. இப்போ நாம இதுவரைக்கும் கிராம சபைக் கூட்டம் நடத்திய கிராமங்களில் எத்தனை கிராமங்களுக்கு திரும்பப் போயிருக்கீங்க? அங்கே எவ்வளவு பேரை நம்ம கட்சியில் சேர்த்துருக்கீங்க?’ என்று கமல் கேட்க... அதற்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதில் இல்லை. இப்படியே போனால் என்னவாகும்..? என்ன செய்வது? எனத் தீவிர யோசனையில் இருக்கிறாராம் கமல்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close