அ.தி.மு.க.வில் மீண்டும் இணையும் பாக்யராஜ்... ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் முயற்சி!

  பா.பாரதி   | Last Modified : 03 Oct, 2018 02:15 pm
actor-bhagyaraj-re-joins-in-admk-ops-eps-try

சினிமாவில் ஜெயித்த பாக்யராஜால் அரசியலில் ஜெயிக்க முடியாதது பெரும் சோகமான நிகழ்வு.

இத்தனைக்கும் அவர் எம்.ஜி.ஆரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு அரசியலுக்கு வந்தவர். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழா ஒன்றில் ‘’எனது வாரிசு பாக்யராஜ்” என்று பகிரங்கமாகவே  அறிவித்தார். 1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தமிழகம்  முழுவதும் ஒற்றை   ஆளாக சுற்றுப்பயணம் செய்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார், பாக்யராஜ். எம்.ஜி.ஆரின் நேரடி கண்காணிப்பில்,  பாக்யராஜின் பயணத்திட்டம்  வகுக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் பாக்யராஜுக்கு திரளும் கூட்டம் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. பாக்யராஜின்  துரதிருஷ்டம், எம்.ஜி.ஆரின்  திடீர்  மரணம், அவரது  அரசியல் பாதையை  சேதாரம் ஆக்கி விட்டது.

அ.தி.மு.க.வில், எம்.ஜி.ஆர். இடத்தை, ஜெயலலிதா நிரப்பிவிட,  தனிக்கட்சி தொடங்கினார் பாக்யராஜ். போணியாகவில்லை. பெரும் பொருளாதார இழப்பையும் சந்திக்க  நேர்ந்தது. கட்சியை கலைத்து விட்டு, சினிமா- ‘பாக்யா’ பத்திரிகை என்று தன்னை சுருக்கி கொண்டார். அரசியலில் சூடுபட்ட பூனையான பாக்யராஜை தேடி மீண்டும் அரசியல் அழைப்பு விடுத்திருப்பவர்கள் அதிமுகவின் தற்போதைய ரட்சகர்களான ஓ.பி.எஸ்-சும், இ.பி.எஸும். அரசியல் வெற்றிக்கு சினிமா கவர்ச்சி அவசியம்  என்பதை உணர்ந்துள்ளதால் பாக்யராஜை, தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

 

இதன் தொடக்கமாகவே அவர், அரசு சார்பில் நடந்த   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கவுரவிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
விரைவில்,  அதிமுக மேடைகளில்  பாக்யராஜை  பார்க்கலாம். ரஜினி,கமல் போன்ற வெள்ளித்திரை ஜாம்பவான்களை எதிர்கொள்ள, பாக்யராஜ் ஓரளவு உதவுவார் என்று நம்புகிறது அதிமுக மேலிடம்.

-பா.பாரதி

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close