தே.மு.தி.க-வை கட்டிக்காக்க மகனை களமிறக்கும் விஜயகாந்த்!

  பா.பாரதி   | Last Modified : 03 Oct, 2018 04:12 pm
vijayakanth-is-playing-a-son-to-save-the-dmdk

ஒரு வழியாக தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்து விட்டார், விஜயகாந்த். இது காலத்தின் கட்டாயம் என்கிறார்கள், தே.மு.தி.க. வட்டாரத்தில்...

அனைத்து கட்சிகளும் ஏதாவது, ஒரு கட்டத்தில் சோதனையை சந்திக்க நேரிடும். தே.மு.தி.க.வுக்கு இப்போது சோதனை. தொடர் தோல்விகள், நிர்வாகிகள் ஓட்டம் ஆகியவற்றைவிட அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்தின் உடல் நலிவுதான் அந்த கட்சியின் முடக்கத்துக்கு முக்கிய காரணம்.

வெளிநாட்டு சிகிச்சை பெரிதாக பலன் அளிக்காத நிலையில், விஜயகாந்தால் முன்பு போல் கட்சி பணிகளைக் கவனிக்க முடியவில்லை. கட்சியை முன்னெடுத்து செல்லுமாறு, நிர்வாகிகள் பிரேமலதாவை கட்டாயப்படுத்த, அவர் மறுத்து விட்டார். தன் கணவரை அருகிலேயே இருந்து கவனித்து கொள்ள வேண்டியிருப்பதால், முழு நேர அரசியல் தனக்கு ஒத்துவராது என்று கூறி ஒதுங்கி கொண்டார். அதன் பிறகே விஜயகாந்தின் முதல் மகன் விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வருவது என  கட்சியின் ‘கிச்சன் காபினெட்’ முடிவு எடுத்ததாக சொல்கிறார்கள். பேட் மிட்டன் போட்டிகளில்  ஆர்வம் காட்டும், பிரபாகரன் நாய்கள் வளர்ப்பிலும் முனைப்பாக உள்ளார்.

இளம் வயது விஜயகாந்தை பிரதிபலிக்கும் இவரது தோற்றம், பிளஸ் பாய்ண்டாக பார்க்கப்படுகிறது. தனது அரசியல் பயணத்தை  வரும் 6 -ம் தேதி அவர் தொடங்குகிறார். அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரில் நடக்கும்  தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் விஜய் பிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.

பிரபாகரனுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் அரசியலுக்கு வரலாம் என்கிறது தே.மு.தி.க.வட்டாரம்.

-பா.பாரதி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close