தமிழகம் முழுவதும் தாமரை சேவகர்கள்... பரபரக்கும் பா.ஜ.க.!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 06:11 pm
thamarai-sevakarkal-across-tamilnadu-bjp-plan

மக்களுக்கு சேவை செய்ய தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளில் சேவை செய்ய  தனது கட்சி சார்பில் தாமரை சேவகர்களை நியமிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களைப் பிடிக்கவும், எதிர்காலத்தில் கட்சியை வலுவாக்கவும் பல்வேறு செயல்பாடுகளை பா.ஜ.க நிர்வாகிகள் நிகழ்த்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டக் கிராமங்களில் ஆயிரத்து 300 பேரை தாமரை சேவகர்களாக களமிறக்கி இருக்கிறது. இவர்கள், மத்திய அரசின் இலவச காஸ் அடுப்பு, பிரதமர் மானிய வீடுகள், இலவச மருத்துவக்  காப்பீடு போன்ற திட்டங்களை கிராமப் பகுதியிலுள்ள மக்களுக்கு பெற்றுத்தந்து வருகின்றனர். இது அப்பகுதிகளில் பாஜகவுக்கு நற்பெயரை உருவாக்கி வருகிறது. 

இந்தத் திட்டம் குறித்து அமித்ஷாவிடம், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எடுத்துக் கூறியுள்ளார். இதற்காக அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார் அமித்ஷா. இதனால், உற்சாகமான தமிழிசை, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும், தாமரை சேவகர்களை நியமிக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close