அக்டோபர் 12-ல் கண்டம்... கர்நாடகாவில் தப்புமா குமாரசாமி அரசு..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 07:01 pm
on-october-12th-change-the-ministreis-missing-kumaraswam-government-in-karnataka

தமிழக முதல்வர் போலவே கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தனது அமைச்சரவையின் ஆயுள்காலம் தெரியாமல் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எடப்பாடி  பழனிச்சாமியின் எதிர்காலத்தை  தீர்மானிக்க உள்ள நிலையில், கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியின்  ஆயுள் வரும் 12-ம் தேதி நிர்ணயம் ஆகப்போகிறது. அன்று தனது மந்திரி சபையை விரிவு படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். சொற்ப எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை நகர்த்தி வருகிறார். ஒரு நாள் முதல்வர் எடியூரப்பா, எப்படியும் குமாரசாமியை கவிழ்த்து விடுவது என்று சங்கல்பம் செய்து வியூகம் அமைத்து வரும் நிலையில், அமைச்சரவை விரிவு படுத்தப்பட உள்ளது.

டஜனுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம் பிடிக்கும்   நிலையில், காலி இடங்களோ 6 மட்டுமே உள்ளது. அமைச்சர் நாற்காலியில் யாரை அமர்த்துவது என்று கட்சியின் பிதாமகனான தேவகவுடாவுடன் பலமுறை ஆலோசனை நடத்தி விட்டார் குமாரசாமி.

இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், புதிய புயல் அங்கு வீச ஆரம்பித்துள்ளது. கர்நாடகத்தில் மேல் சபையும் உள்ளது. அதில், இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.சி,க்களும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்த, சிண்டை பிய்த்து கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார் குமாரசாமி. ‘’அமைச்சரவை மாற்றம் நிகழும் நாளில் குமாரசாமிக்கு ஆப்பு வைப்போம்’’ என்று கூறி வருகிறது எடியூரப்பா தரப்பு.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close