’கருணாநிதி காலில் விழுந்த துரோகி டி.டி.வி.தினகரன்’: நமது அம்மா சாடல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Oct, 2018 04:30 pm
karunanidhi-s-fallen-traitor-t-t-v-dhinakaran-namadhu-amma-says

’முட்டைப்போண்டா, துருப்பிடித்த தகரம், கருணாநிதியின் காலில் விழுந்த துரோகி’ என அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நமது அம்மா நாளிதழ் கடுமையாகச் சாடியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவாளர்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், டி.டி.வி.தினகரனை பிடல்காஸ்ட்ரோவோடும், லீகுவான்கியோடும் ஒப்பிட்டு அவரது கட்சித் தொண்டர்கள் சுவரொட்டிகளை வடிவமைத்து ஒட்டியுள்ளனர். இந்தப்போஸ்டர்களை மையமாக வைத்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ’பெரோ பேர் வழி எங்கே... பிடல் காஸ்ரோ எங்கே’ என்கிற தலைப்பில் டி.டி.வி.தினகரனைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

 

அதில், ‘’மாஃபியா கும்பலின் சதி வலையையும், சட்டையைக் கிழித்துக் கொண்டு அலையும் அதிகார வெறியர்களையும் லாவகமாய் எதிர்க்கொண்டு, முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டு, பிளவற்ற இயக்கத்தை ஒன்றுபடுத்தி, கழக நிறுவனரின் நூற்றாண்டுப் பெருவிழாவை முப்பத்திரெண்டு மாவட்டங்களிலும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து... காவேரி உரிமையை சட்டப்போராட்டத்தால் வென்று காட்டி, பறிபோன ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு, ஸ்டெர்லைட்டுக்கு  பூட்டு இவற்றோடு மீத்தேனை வெளியேற்றி, மின்வெட்டை அகற்றி, உணவு தானிய உற்பத்தியில் உலகத்தரக் கல்வியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் என்றெல்லாம் ஏராளமான சாதனைகளைப் படைத்து இந்தியாவில் தலை சிறந்த மாநிலம் என்கிற பீடுநடை பெருமையோடு சங்கத் தமிழ் பூமியை வழிநடத்திக் கொண்டிருக்கும் சாதனைகளைச் சகோதரர்களை, சேகுவாரவோடும், பிடல்காஸ்ட்ரோவோடும், ஒப்பிட்டு கந்துஞ்சாது கடமையாற்றும் அவர்களை உற்சாகப்படுத்தினால் டோக்கன் செல்வருக்கு ஏன் வருகிறது எரிச்சல். 

நாற்பாதண்டு காலம் கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக இருந்த பிடல்காஸ்ட்ரோவோடு ஒப்பிடலாமா என்று கேள்வி கேட்கிற மிஸ்டர் திகார், உங்கள் கட்சியின் வேகாத சில தொண்டர்கள் உங்களை லீகுவான்யூ என்றும் பிடல்காஸ்ட்ரோ என்றும் போஸ்ட்ர அடித்து புல்லரித்துக் கொள்கிறார்களே... அதற்காக நீங்கள் வெட்கித் தலைகுனிந்ததுண்டா? சிங்கப்பூரை தெற்காசிய பொருளாதாரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் லீகுவான்யூ... நீங்களோ சிங்கப்பூர் பிரஜை என்று ஒரு மறைமுக குடியுரிமையை வாங்கி வைத்துக் கொண்டு அங்கிருந்த வண்ணம் அந்நிய  செலவாணி மோசடியில் ஈடுபட்டு அதற்காக ஓராண்டு காலம் சென்னை மத்திய சிறையிலும், அரையாண்டு காலம் கடலூ சிறையிலும் காலம் கழித்த ஃபெரா குற்றவாளியாச்சே...

அப்படியிருக்க உங்களை லீகுவான்யூவோடு ஒப்பிட்டு சுவரொட்டி அச்சிட்டதற்கு கூனிக்குறுக வேண்டிய ஆள்தானே நீங்கள்.. அதுபோலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன் ஆயுளெல்லாம் போராடியவர் பிடல் காஸ்ட்ரோ, அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து லண்டன் ஓட்டல் வழக்கிலிருந்து ரக்சியமாய் தப்பித்த கழகத்தின் துரோகி... அதற்காக அம்மா அவர்களால் பாண்டிச்சேரி பக்கமாக பத்திவிடப்பட்டு பத்தாண்டு காலம், அங்குள்ள பண்ணை வீடுகளில் பதுங்கிக்கிடந்த கோழை. அப்படிப்பட்ட உங்களை பிடல்காஸ்ட்ரோவோடு ஒப்பிட்டு உங்களது அரைவேக்காட்டு தொண்டர்கள் அடித்த போஸ்டருக்காக முக்காடு போட்டு வெட்கப்பட வேண்டிய ஆளு முட்டை போண்டாதானே..

ஆக, உம்மை லீகுவான்யூவோடும், பிடல்காஸ்ட்ரோவோடும் ஒப்பிட்டதைவிட பெரும் குற்றமல்ல எங்கள் தலைவர்களை சேகுவாராவோடும், பிடல்காஸ்ட்ரோவோடும் இணையாக்கி வர்ணித்தது.. அதனால் தங்கத்தைத் தரம் பார்த்துச் சொல்வதற்கு உரைகல்லுகுத்தான் உரிமை உண்டு. உம்மைப்போன்ற துருப்பிடித்த தகரத்திற்கு அல்லவே..’’ என அம்மா நாளிதழ் கடுமையாக திட்டித் தீர்த்திருக்கிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close