’சர்கார்’ விஜயை அரசியலுக்கு தூண்டுகிறாரா கலாநிதி மாறன்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 04:12 am
kalanithi-maran-behind-sarkar-politics-stalin-upset

“ஊரெல்லாம் சர்கார் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. அதுவும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சு. இந்த விழா ஓர் அரசியல் கட்சியின் மாநாடாகவே நடந்து முடிந்துள்ளது.

விஜய் ரசிகர்களை தமிழகம் முழுவதிலும் இருந்து விமானம் மூலம் அழைத்து வந்திருந்தது சன் டிவி. சர்கார் ஆடியோ விழாவில் விஜயை மேடையேற்றும்போதே, தளபதி, தளபதி, தளபதி என அரங்கம் முழுதையும் கோஷம்போட வைத்தார் தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா. இது எதேச்சையா நடந்ததில்லையாம். விஜய், கலாநிதி மாறன் சேர்ந்து போட்ட திட்டப்படியே  விஜயை தளபதி என்ற பெயரிலேயே ஃபுல் ப்ரமோஷன் செய்தார்கள் எனக்கூறப்படுகிறது. 

விழாவில் பேசிய விஜய், ‘எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால், நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால், அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை.

நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்துதான் ஆக வேண்டும்’’ எனப் பேசிய அவர் ஒரு குட்டிக்கதையையும் சொல்லிவிட்டுப்போனார். அரசியலுக்கு வரப் போவதை விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்த படத்தின் தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் விஜய் பேச்சுக்குக் கைதட்டினார். அத்தோடு விட்டாரா அவர்?  

புதிதாக கட்சி தொடங்கும் ரஜினி, மு.க.ஸ்டாலினுக்கு பிரதான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே மேடையில் ரஜினியை வெகுவாக புகழ்ந்து தள்ளினார் கலாநிதி மாறன். ‘’தமிழ் சினிமா உலகில் இரண்டு பேர் மிகவும் அமைதியானர்கள். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னொருவர் இளையதளபதி விஜய்’’ என்றவர், ‘சினிமாவில் சாதனை நிகழ்த்திய இருவரும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றும் புகழ்ந்துரைத்தார் கலாநிதி மாறன்.

கலாநிதி மாறன் விழாக்களை தவிர்ப்பவர். அப்படியே கலந்து கொண்டாலும் பேசுவதில்லை. இந்த மேடையில் அவரது அரசியல் பேச்சு பல தரப்பினரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. இது திமுக வட்டாரத்தைக் கொஞ்சம் கோபமாக்கி இருக்கிறது. சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வை வீட்டில் இருந்தபடியே பார்த்திருக்கிறார் தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

இது சம்பந்தமாக ஸ்டாலினிடம் பேசியவர்கள், ‘இது விஜய் படம் என்பதைவிட அரசியல் படம். அவரு என்னதான் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தாலும், தனிக் கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில்தான் பேசிட்டு இருக்காரு. அதற்கு மாறன் சகோதரர்கள் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. மெர்சல் படத்தில் இருந்தே விஜய்யை தளபதினு அழைக்க ஆரம்பிச்சாங்க. இப்ப சர்கார் பட ப்ரமோஷன்ல விஜய் அப்படிங்குற பேரைவிட ’தளபதி’ என்ற பட்டத்தைத்தான் ப்ரமோட் பண்றாங்க. திமுகவுக்கு எதிராக விஜய்யை கொம்பு சீவி விடுறாங்களா? இது இப்படியே போனால்,  நமக்கும் சிக்கல்தான்” எனச் சொல்லி இருக்கிறார்கள். 

‘நானும் பார்த்தேன். விசாரிக்கிறேன்..’ என்று மட்டும் ஸ்டாலின் கொஞ்சம் கோபமாக சொன்னதாகக் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை மாறன் சகோதரர்கள் இருவரிடமும் சர்கார் படம் தொடர்பாக ஸ்டாலின் பேசவில்லை” என்கிறார்கள்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close