விஜயின் சர்காருக்குத் தடை..? கலாநிதி மாறனால் எடப்பாடி கப்சிப்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 04:13 am
edappadi-palanisami-s-silent-on-vijay-s-sarkar

சர்கார் படத்தில் ஆளும் தரப்பை கடுமையாகச் சாடியுள்ளதால் விஜய் மீது தி.மு.க-வைவிட, அ.தி.மு.க உக்கிரமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ’தலைவா’ படத்திற்கு பெரும் சிக்கல் வந்தது. அடுத்து ’கத்தி’ படத்திலும் அரசியல் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது, கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், படத்தலைப்பிலேயே ’சர்கார்’ என நேரடி அரசியல் சார்ந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இதில் ஆளும் தரப்பையும், எதிர்கட்சியையும் ஏகத்திற்கும் தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்தோடு மத்திய அரசையும் இந்தப்படத்தில் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள். 

சர்கார் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த விவகாரம் தி.மு.க- அ.தி.மு.க-வினரிடையே விஜய் மீது கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமாருக்கு முன்பாகவே அரசு தரப்பில் விவாதித்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ‘நாட்டைக் கவனமாகவும் பத்திரமாகவும் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். இதில் நடிகர்களுக்கு எதுக்கு கவலை? எங்களது வேலையை நாங்க பார்க்கிறோம். அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். நாங்க சரியாக இருக்கும்போது நடிகர்களுக்கு எதுக்கு முதல்வர் கனவு?’ என்று கேட்டிருக்கிறார் உதயகுமார்.

அவர் மட்டுமல்ல, சில அமைச்சர்களும் இது குறித்து விவாதித்திருக்கிறார்கள். ஆனால்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சு திட்டமிடாமல் நடக்கவில்லை. முன்பே தயார் செய்யப்பட்ட உரை அது. அவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. இப்போதைக்கு  தேவையில்லாமல் நாம் தலையிட்டு படத்தை தடுக்கவோ, அவரை விமர்சனம் செய்யவோ வேண்டாம். அதை வைத்து மேலும் விளம்பரம் தேடிக்கொள்வார். கண்டுகொள்ளமல் அமைதியாக இருப்பதே நல்லது.

விஜய் பேசி எதுவும் ஆகப் போவதில்லை. இப்போ விஜய் என்ன பேசினாலும் அது தி.மு.க-வுக்குதான் இழப்பு. ஏனென்றால்,  விஜய்க்கு பின்னால் இப்போது இருப்பது கலாநிதி மாறன். அதனால், நாம எதுவும் சொல்ல வேண்டாம்’ என அமைச்சர்களுக்கு அட்வைஸ் கூறி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close