மறக்கப்படும் கருணாநிதி... கண்டுகொள்ளாத தி.மு.க!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 04:13 am
karunanidhi-forgotten-dmk-unfazed

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் கல்வெட்டை மறைத்தும் அதனை கட்சி நிர்வாகிகள் கண்டு கொள்ளாததால் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். 

கடந்த மாதம் 4-ம் தேதி நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் கருணாநிதியின் படம் இடம்பெறவில்லை. அதேபோல் தி.மு.க முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி கூறி டி.ஆர்.பாலு சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். அதில், மு.க.ஸ்டாலின் படம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. ஆனால், கருணாநிதியின் படம் இடம்பெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த தி.மு.க தொண்டர்கள், ‘’தலைவர் இறந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில், அவரது படத்தைப் போடக்கூட மனம் வரவில்லையா?’ எனக் கொதித்தனர். 

மு.க.அழகிரி மகன் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த போஸ்டரை வெளியிட்டு, ‘தலைவர் படம் எங்கே?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.    
முன்னதாக திருச்சி, புதிய கலெக்டர் அலுவலகத்தை தி.மு.க., ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். இதற்கான கல்வெட்டை, கலெக்டர் அலுவலக  வாசலில் வைத்திருந்தனர். அந்தக் கல்வெட்டை, 2014-ல் தாசில்தார் ஒருவர் சேதப்படுத்தி விட்டார். அப்போதே தி.மு.க., தரப்பில் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தற்போது கட்டடத்தின் உள்ளே  இருந்த கல்வெட்டையும் மறைத்து விட்டார்கள். இதை, திருச்சி மாவட்ட, தி.மு.க.,வினர் யாரும் கண்டுகொள்ளவிலை எனக்கூறப்படுகிறது. ''இதே ஜெயலலிதா கல்வெட்டை மறைத்திருந்தால் அ.தி.மு.க-வினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? எனக் கொதிக்கும் தி.மு.க அடிப்படைத் தொண்டர்கள் அவர்களது கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியாக இருப்பதாக கூறுகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close