தினகரனுடன் சந்திப்பு உண்மையா? -விளக்கமளிக்கிறார் ஓபிஎஸ்!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 05:24 pm
ops-press-meet-today-for-explanation-about-dinakaran-meet

தினகரனை சந்தித்து  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்கச் சொன்னது உண்மை தானா? என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விளக்கமளிக்கிறார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் செய்தது தவறு தான் என்று வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.கவுடன் அ.ம.மு.க இணைய முயற்சிக்கிறது என்று பதில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று விளக்கமளிக்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close