தினகரனின் எதிர்பார்ப்பு கற்பனையானது, அது ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2018 12:17 pm
minister-r-p-udhayakumar-press-meet

அ.தி.மு.கவை கலைக்க நினைக்கும் டிடிவி தினகரனின் எதிர்பார்ப்பு கற்பனையானது, அது ஒருபோதும் நிறைவேறாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியது சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு ஓபிஎஸ் நேற்று விளக்கமளிக்கையில், 'தினகரன் பொய் சொல்கிறார்.  எனக்கும், தினகரனுக்கும் பொதுவான நண்பர் கேட்டுக்கொண்டதால் டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன். சந்தித்தது உண்மைதான்; ஆனால் அவருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மக்களிடையே அ.தி.மு.க அரசு செல்வாக்குடன் திகழ்வதை 
தினகரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இவ்வாறு பொய் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்" என்றார். 

தொடர்ந்து,  மக்கள் பசியை போக்கும்விதமாக 20 கிலோ இலவச அரிசி வழங்கி அன்னப்பூரணி அரசாக அ.தி.மு.க அரசாக திகழ்கிறது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close