தர்ம யுத்தமா? தர்ம சங்கடமான யுத்தமா? - தமிழிசை பேட்டி

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2018 12:52 pm
tamilisai-press-meet-today-and-talks-about-ttv-dinakaran-ops-issue

டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-க்கு இடையில் நடப்பது தர்ம யுத்தமா? அல்லது தர்ம சங்கடமான யுத்தமா? என எனக்குத் தெரியாது. எந்த  சூழ்நிலையில் அவர்கள் சந்தித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதுகுறித்து தெரிவிக்கப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் நேற்று விளக்கமளிக்கப்பட்டது. 

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்தார். அவர், "அவர்களுக்குள் நடப்பது தர்ம யுத்தமா? தர்ம சங்கடமான யுத்தமா என தெரியாது? சந்திப்பு என்பது சூழ்நிலையை பொறுத்தே அமையும். அவர்கள் இருவருக்கும் நடக்கும் போரில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. 

தினகரன் கட்சியினர் எங்களது கட்சியினரை சந்திக்கக்கூட தூது அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்.  மற்ற கட்சிகளின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர்" என்றார். 

தொடர்ந்து, துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டுள்ளது என ஆளுநர் கூறியதற்கு பதில் அளித்த தமிழிசை, "தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்களும், வழிகாட்டும் தலங்களும் பிரச்னைக்குள்ளகியுள்ளது. கல்வி வியாபாரமாகிக் கொண்டிருந்தது என்பதை தான் ஆளுநர் உணர்த்துகிறார். பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் மதிப்பெண் போடுகிறார்கள். இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார். 

மேலும் முதல்வர் டெல்லி செல்வது குறித்து, "ஆக்கபூர்வமான நடவடிக்கைக்காக முதல்வர் டெல்லி செல்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அவர் பிரதமரை சந்திக்க உள்ளார்.  தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close