’பிடிக்கலைன்னா போய்டுவேன்...’ மிரட்டும் ஓ.பி.எஸ்... பயத்தில் எடப்பாடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Oct, 2018 01:55 pm
do-not-like-to-catch-up-bullying-ops-fear-of-edappadi

ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என டி.டி.வி.தினகரன் கொளுத்திப்போட்டது அ.தி.மு.க-வில் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்கிறது.

டி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பை நேரலையில் பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரஸ் மீட் முடிந்ததுமே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு போன் போட்டாராம் எடப்பாடி. அந்த நேரத்தில் போனில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

நீண்ட நேரத்திற்கு பிறகு எடப்பாடியின் லைனிற்கு தானாகவே வந்த ஓ.பி.எஸ்.,‘நம்மைப் பிரிக்கவும், என்னைப் பழிவாங்கவும், திட்டம் போட்டு இப்படி பொய்யான தகவலை தினகரன் பரப்பிக் கொண்டிருக்கிறார். பிடிக்கலைன்னா விட்டுட்டுப் போய்டுவேன். துரோகம் செய்யுற பழக்கம் எனக்கு இல்லை. நான் அவரை சந்தித்தது நமது அணிகள் ஒன்றிணையும் முன்பு. அவர் வற்புறுத்தியதால்தான் சென்று வந்தேன்" என்று தெரிவித்தாராம்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த எடப்பாடி, ‘நான் உங்களை நம்புறேன். ஆனால், நடக்கிறது எல்லாம் கவலை தரக்கூடியதாக இருக்கு. பார்த்துக்கோங்க...’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாராம். ஓ.பி.எஸ் எங்கே கிளம்பி விடுவாரோ என எடப்பாடி  பயத்திலும், வருத்தத்திலும் இருக்கிறாராம்.

எடப்பாடியின் சந்தேகத்தை போக்கும் வகையில்தான், ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கங்களை அளித்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close