துணைவேந்தர் நியமனத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் சம்மந்தமில்லை: அமைச்சர் அன்பழகன்

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2018 02:38 pm
kp-anbazhagan-press-meet-and-replied-for-tn-governor-s-statement

துணைவேந்தர்கள் நியமனத்திற்கும், உயர்கல்வித் துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,  ஆளுநர் எதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு துணைவேந்தர் பதவிகளுக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "துணைவேந்தர்கள் நியமனத்திற்கும்,  உயர்கல்வித் துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆளுநர் எதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை.

துணைவேந்தர்களை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே. தேடுதல் குழுவை அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. தேடுதல் குழு மூலம் துணை வேந்தர் பதவிக்கு 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் பரிந்துரைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை தேர்தெடுத்து ஆளுநர் துணைவேந்தரை நியமிக்கிறார்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close