108 ஆம்புலன்ஸ் சேவை சீரானது!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 04:26 pm
108-emergency-number-issue-solved-now

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது சீரடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையானது இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதிப்படைந்ததாக தகவல் வெளியானது. பி.எஸ்.என்.எல் -இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்துள்ளது  என்றும், அந்த எண்ணுக்கு பதிலாக தற்காலிகமாக 044- 40170100 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு சேவை வழக்கம்போல இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த எண் செயல் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close