அதிமுகவின் அட்ராசிட்டி: ரெட் அலார்ட்டில் அரசியல் விளையாட்டா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Oct, 2018 08:35 pm
admk-play-a-game-in-red-alert

கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ரெட் அலார்ட்டை வாபஸ் பெற்றதற்கான காரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

கடந்த 4 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் தமிழகத்தில் 7 ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என எச்சரித்திருந்தார். மேலும் குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்யும் ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து பல்வேறு தரப்பு மக்கள் பீதியடைந்தனர். ஆனால் அடுத்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் வானிலை ஆய்வு மையம் எந்த மழையும் பெய்யவில்லை,ரெட் அலார்ட்டும் திரும்பபெற்றுவிட்டது. 

5 மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு 6 ஆம் தேதி அறிவிக்கப்படம் என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இடையில் உள்நுழைந்த வானிலை ஆய்வு மையம் திடீரென ரெட் அலார்ட்டை வாபஸ் வாங்கிக்கொண்டு மழை பெய்யாது என சொல்லிவிட்டு நகர்ந்தது. இதற்கிடையில் திருவாரூ, திருப்பரங்குன்றத்திற்கான தேர்தல் தேதி மட்டும் அறிவிக்காமல் மற்ற 5 மாநிலத்திற்கான  சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டு தமிழகத்திற்கு தற்போதைக்கு தேர்தல் கிடையாது என சொல்லிவிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் பேட்டியை நிறைவு செய்தார்.

காரணம் கேட்டதற்கு மழைதான் காரணம் என ஒரே வார்த்தையில் தெரிவித்தனர். அதே சமயம் பருவமழையால் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாக தமிழக அரசு கேட்டுக்கொண்டதால்தான், தேர்தல் ஒத்துவைக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனால் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கையில், தற்போதைக்கு பருவமழைக்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்திருந்தார். இதனால், பருவமழை அறிவிப்பு திட்டமிட்டு அரசுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

‘ரெட் அலர்ட்’ என மக்களை பீதியடையவைத்துவிட்டு பின் வாபஸ் பெறுவது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று என்றும், தேர்தலை நடக்கவிடாமல் தடுக்க அதிமுக செய்த மாஸ்டர் பிளான் என்றும் நெட்டிசன் வருத்தெடுத்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close