நக்கீரன் கோபால் கைது... திடுக்கிட வைக்கும் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Oct, 2018 12:20 pm
nakkeeran-gopal-arrested-shocking-background

பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. 

இன்று காலை புனே செல்ல நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தனர். தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால்  மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நக்கீரன் இதழில் தொடர்ந்து  அருப்புக்கோட்டை பேராசிரியர், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தது. ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பாக அளித்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த மாதம் 26-28ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் ’4 முறை கவர்னரைச் சந்தித்தேன்’’ பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து’ என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியானது. அந்தக் கட்டுரையில், ’இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பியான ராஜேஸ்வரியிடம் நிர்மலா தேவி சில தகவல்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நிர்மலா தேவி, தான் கவர்னர் மாளிக்கைக்கு சென்ற போது கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தையும், கவர்னர் மாளிகை செயலாளர் ராஜகோபாலையும் 4 முறைக்கும் மேல் நேரடியாக சந்தித்துள்ளேன். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது’ என ராஜேஸ்வரியிடம் வாக்குமூலம் அளித்ததாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. மேலும்,’’ இதையெல்லாம் வெளியில் சொன்னால் என் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’’ என்றெல்லாம் நிர்மலா தேவி பல பகீர் விவகாரங்களை ராஜேஸ்வரியிடம் தெரிவித்து இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. 

இதனைக் கேட்ட எஸ்.பி.ராஜேஸ்வரி, இந்த விவகாரத்தில் கவர்னர் மற்றும் ஆளுநர் மாளிகை செயலாளர் ராஜகோபால் ஆகியோர் பெயரை பயன்படுத்தக்கூடாது’ என நிர்மலாதேவியை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இந்த வாக்குமூலத்தை டைப் செய்த டைப்பிஸ்டிடமும் ஆளுநர் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும், ராஜகோபால் பற்றிய தகவல்களையும், நீக்கச் சொல்லி விட்டதாகவும் நக்கீரன் இதழில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இது ஆளுநர் மாளிகையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக கடந்த 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்து, நக்கீரன் நிர்மலாதேவி விவகாரத்தை தொடர்ந்து எழுதி வருவதையும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் வலியுறுத்தி இருக்கிறார்.  

இதனைத் தொடர்ந்தே நக்கீரன் கோபால் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close