உற்சாகம் தந்த மோடி ... எகிறியடிக்கும் எடப்பாடி... ஊசலாட்டத்தில் ஓ.பி.எஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Oct, 2018 01:39 pm
enthusiastic-modi-meeting-edappadi-palanisamy-of-intimidation

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மோடியை சந்தித்து வந்த பிறகு புறக்கணிப்பு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பன்னீர்செல்வம் படத்தை எங்கேயும் போடாமல் தவிர்க்கச் சொன்னார் முதல்வர். இப்போது அதே வழிமுறையை தமிழகம் முழுக்கவே பின்பற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கும் உத்தரவு போயிருக்கிறதாம்

.

வண்டலூர் அருகே நன்மங்கலத்தில் நேற்று வன உயிரின வார விழா நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவிலும், ஜெயலலிதா படமும் எடப்பாடி படமும் மட்டுமே போடப்பட்டிருந்தது. பேருக்காக கூட பன்னீர் படம் இல்லை. இந்த தகவல் ஓ.பன்னீர்செல்வம் கவனத்துக்கும் போக, ‘திட்டமிட்டு எல்லாத்தையும் பண்றாங்க. பண்ணட்டும் பார்த்துக்கலாம்..’ எனச் சொல்லி வருகிறாராம் பன்னீர்செல்வம்.  வெளியில் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்தித்த போது அவருடன் ஏற்பட்ட சமாதானத்தால் மேலும் உற்சாகமாக இருக்கிறாராம் எடப்பாடி.

இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் நெருக்கடி கொடுத்து ஓரம் கட்டும் வேலையில் துரிதமாக செயல்படுவார் எடப்பாடி என்கிறார்கள். இதனால்,  கட்சியிலும், ஆட்சியிலும் ஓ.பி.எஸ் வகிக்கும் பதவிகளுக்கு பங்கம் ஏற்படலாம் எனவும் ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகின்றனர்.   

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close