நெஞ்சுவலியால் துடிக்கும் கருணாஸுக்கு முன் ஜாமின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Oct, 2018 03:07 pm
karunas-get-bail-madurai-high-court

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடனைத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசாரால் ஓரிடு வாரங்களுக்கு முன் கருணாஸ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், சேப்பாக்கத்தில் போராடியதற்காக திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, புளியங்குடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 302-வது பிறந்த நாள் விழாவில் தேவர் பேரவை தலைவரின் கார் கண்ணாடியை உடைத்ததற்காக திரும்பவும் கைது என்ற தகவல் வந்தது. போலீசார் கைது செய்ய வீட்டுக்கு சென்றனர். அதிகாலையிலேயே கருணாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், கருணாஸ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார். மருத்துவமனையிலேயே கருணாஸ் அனுமதிக்கப்பட்டாலும், புளியங்குடி வழக்கில் கைது ஆகாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த இன்று விசாரித்த நீதிமன்றம்,  கருணாஸுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் இருக்கும் கருணாஸ் இன்னும் டிஸ்-சார்ஜ் ஆகவில்லை.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close