பா.ஜ.க -அ.தி.மு.க கூட்டணி... எடப்பாடியிடம் உறுதிபடுத்திய மோடி!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Oct, 2018 03:53 pm
bjp-admk-alianze-modi-confirmed-to-edappadi

பிரதமர் மோடியை சந்தித்தித்தபோது பாஜகவுடன் கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், டெல்லியிலிருந்து உற்சாகத்துடன் திரும்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழக அரசு மீது மத்திய அரசு சில நேரங்களில் கோபத்தைக் கொட்டி வந்தாலும், இந்த முறை எடப்பாடி அப்பாயின்ட்மெண்ட் கேட்டதும் கிடைத்து விட்டது. பிரதமரை பார்த்ததும் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஃபைலை எடப்பாடி கொடுத்திருக்கிறார் .
பிறகு அரசியல் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் ‘தமிழ்நாட்டுல இருந்து எனக்கு வரும் ரிப்போர்ட் எதுவும் சரியாகவே இல்லை. நான் அத்தனை விஷயங்களையும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். எங்க ஆட்கள் எதாவது சொன்னால் அதை உங்க ஆட்கள் கடுமையாக விமர்சனம் செய்யுறாங்க. தமிழ்நாட்டில் பிஜேபி வந்துடவே கூடாது என்பதில் எல்லோரைப் போலவே நீங்களும் உறுதியாக இருக்கீங்க...’ என்று நேரடியாகவேக் கேட்டிருக்கிறார் பிரதமர்.

’’எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை என எல்லோருக்கும் சட்ட ரீதியா பல சிக்கல் வந்தது. அதில் எல்லாம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எச்.ராஜாவுக்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால், இன்று வரை அவரை நாங்கள் கைது செய்யவில்லை. தமிழ்நாடு போலீஸ் நினைத்திருந்தால், அவரைப் பிடிப்பது பெரிய வேலையே இல்லை. உங்களுக்கு எப்போதுமே நாங்க நன்றி உடையவர்களாகத்தான் இருந்து வருகிறோம். தேர்தல் என்று வரும் போது கூட்டணி குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை தனித்தனியாகவே இயங்கலாம்’’ எனத் தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி.

 

இனி பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என நீங்களே ஒரு கூட்டத்தில் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். உங்கள் அமைச்சர்கள் சிலரும் பொதுவெளியில் பேசி வருவதையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறோம்’ என மோடி கூறியிருக்கிறார். எங்களை தமிழக பாஜக தலைவர்கள் சில நேரங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆகையால், நாங்களும் அதற்கு பதில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது’ எனத் தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி.

 

ஒருவழியாக சமாதானமான மோடி, ’தமிழகத்தில் உள்ள எங்கள் தலைவர்களுடன் பேசுங்கள். அவர்களையும் பேசச்சொல்கிறேன். இனியும், பொதுவெளியில் எதிர் கருத்துக்களைப் பேசுவதை இருதரப்புமே தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தேர்தலில் நமது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெருமளவுக்கு களப்பணிகளுக்கு உத்தரவிடுங்கள்’ எனக் கூறி உற்சாகமாக கைகுலுக்கி அனுப்பி வைத்திருக்கிறார் மோடி.  அதனால்தான், உள்ளே போகும்போது இருந்த உற்சாகத்தை விட, படு உற்சாகத்துடன் திரும்பி வந்து மீடியா முன்பு பேசினார் எடப்பாடி” என்கிறார்கள்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close