நக்கீரன் கோபால் கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 04:01 pm
kamal-haasan-condemned-for-nakkeeran-gopal-arrest

நக்கீரன் கோபால் செய்யப்பட்டதற்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆளுநரின் தனிச்செயலர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து, நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘மக்களின் கருத்து சுதந்திரம் எப்போதெல்லாம் பாதிப்பிற்குள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அதை சீர்படுத்தும் மாண்பு ஊடகங்களுக்கே உரியது. அந்த ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது என்பது ஜனநாயகத்தின் குரல் வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும்' என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கை:

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close