கோவை தொகுதி யாருக்கு..? குழப்பத்தில் பாஜக நிர்வாகிகள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Oct, 2018 05:54 pm
who-is-coimbatore-b-j-p-executives-in-confusion

கோவை தொகுதி வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கி விடப்படுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறார் முன்னாள் எம்.பி-யான சி.பி.ராதாகிருஷ்ணன்.

கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க, சார்பில் இரண்டு முறை, எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். கடந்த மக்களவைத்தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவினாலும் மத்திய அமைச்சருக்கு இணையான, தேசிய கயிறு வாரியத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.

கோவை வட்டாரத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செல்வாக்கு உண்டு. இதனால், அடுத்து நடைபெற உள்ள தேர்தலில் தனக்கே பா.ஜ.க தலைமை சீட் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக கோவை தொகுதியில், பா.ஜ., தரப்பு பெண் வேட்பாளரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாநில துணைத்தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனை அங்கு நிறுத்த விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வானதி சீனிவாசனின் சொந்த ஊரான தொண்டாமுத்தூரை உள்ளடக்கிய தொகுதி இது.

 

இதனை உறுதி செய்யும்  வகையில் அடிக்கடி கோயம்புத்தூர் செல்லும் வானதி சீனிவாசன், கோவை பகுதிகளில் அடிக்கடி  பாஜகவினரை ஒன்று திரட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார். இப்போதே பூத் கமிட்டி நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். இதனால், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்  கலக்கத்தில் உள்ளனர். இந்தத் தகவலை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் சி.பி.ராதாகிருஷ்ணன் குழப்பத்தில் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.  
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close