அரசின் முகத்திரையை கிழிக்க முதலில் வித்திட்ட வைகோவுக்கு நன்றி: நக்கீரன் கோபால்

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 11:38 am
nakkeeran-gopal-thanks-to-vaiko

அரசின் முகத்திரையை கிழித்து நான் விடுதலையாவதற்கு முதல் வித்திட்ட வைகோவுக்கு நன்றி என நக்கீரன் கோபால் உருக்கமாக பேசியுள்ளார். மேலும், நேற்று காலை அவர் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் ஊடகத்துறை நிர்வாகிகளை அழைத்து ஆளுநர் 'காலை விருந்து' கொடுத்துள்ளது மிக மோசமான செயல் என்றார்.

நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாருமான நக்கீரன் கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு பிற்பகல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதற்கிடையே அரசியல் கட்சித்  தலைவர்கள் பலர் நேரடியாக நக்கீரன் கோபாலை சந்தித்தனர். ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி கேட்டு, அதற்கு போலீசார் மறுத்ததால் அங்கு தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அவரையும் போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்த விசாரணையில், நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரமில்லை என்று கூறி அவ விடுதலை செய்யப்பட்டார். பின்னர்  கைது செய்யப்பட்ட வைகோவும் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று நக்கீரன் கோபால், ம.தி.மு.க தலைமை செயலகத்தில் வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறினார். பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது நக்கீரன் கோபால், "நேற்று காலை என்னை கைது செய்து துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில் வைகோ என்னை பார்க்க வந்தார் என்ற தகவல் வந்ததுமே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அந்த இடத்தில் அவர் மாஸ் செய்துவிட்டார். அரசின் முகத்திரையை கிழித்ததற்கு முதல் வித்திட்டவர் வைகோ தான். நான் விடுதலையாவதற்கு அவர் தான்  முதல் காரணம். அவருக்கு பத்திரிகையாளர்கள் சார்பிலும், நக்கீரன் சார்பிலும் எனது நன்றிகள். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு மதிப்பளித்ததால் தான் நான் விடுதலையாகியுள்ளேன். இந்து என்.ராம் நேரடியாக வந்து பேசியதற்கும் நன்றி " என பேசினார். 

தொடர்ந்து பேசிய வைகோ, "நக்கீரன் கோபாலை பார்க்கக்கூட நேற்று என்னை அனுமதிக்கவில்லை. இறுதியில் நீதி வென்று விட்டது. தமிழகத்தில் இவ்வளவு மோசமான ஒரு கவர்னர் இருந்திருக்க மாட்டார். நேற்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் ஆளுநர் மாளிகையில் ஊடகத்துறை நிர்வாகிகளை அழைத்து ஆளுநர் காலை விருந்து கொடுத்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுளார். அவரது கைதை ஊடகம் வெளியிடக்கூடாது என்றே இந்த நிகழ்வு காட்டுகிறது. ஆனால் ஊடகவியலாளர்கள் இதனை கிழித்து எறிந்துவிட்டனர். அவர்கள் முறையான தகவலை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து இன்று கோபால் விடுதலையாகி வெளியே வந்துவிட்டார்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close