உதயநிதியை கிண்டலடிப்பவர்கள் உஷார்... புகார் தொடுக்கப்படும்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Oct, 2018 12:10 pm
udhayanidhi-stalin-will-be-joking-what-do-you-know

தி.மு.க.,வின், அடுத்த வாரிசாக களம் இறங்கி வரும் உதயநிதி பற்றி, சமூக வலைதளங்களில், இளைஞர்கள் பலர், கடுமையாக விமர்சனம் செய்து  கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 

இதனைப் பார்க்கும், உதயநிதி அடிக்கடி 'அப்செட்' ஆகிவிடுவதாகக் கூறப்படுகிறது. கருணாநிதி மறைவிற்குப் பிறகு தி.மு.க மேடைகள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. 3-ம் கலைஞர் என தொண்டர்களால்  அழைக்கப்படும் அவரது பேச்சையும், செயல்பாடுகளையும் நெட்டிசன்கள் பலமாக கிண்டலடித்து வருகின்றனர். 

’தொண்டர்களுக்கு தோள் கொடுப்பேன்’ என உதயநிதி பேசினார். அதற்கு ’நீங்களும் உங்க குடும்பமும் பழத்தை தின்னுட்டு தோலை தான்டா தருவீங்க’ என பலரும் கிண்டலாக பதிவிட்டு உள்ளனர்.  ’வெளியில வந்தா வெச்சி செஞ்சிடறாங்கன்னு யாருப்பா அங்க ஒளிஞ்சிடு இருக்றது, ஓ மூன்றாம் கலைஞரா, அப்போ சரி.’ என பதிவிட்டுள்ளார் ஒருவர்.  

’’காமெடி பீசு உதயநிதி உதயநிதி அரசியலுக்கு வருவதில் ஆச்சரியமில்லை. ’’ ’’ஒரு உபிஸ் சொல்கிறார் கம்பன் வீட்டு கட்டுத்தறியும்....’ அப்படினு... ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பேசுவார். அப்போ உதயநிதி ஸ்டாலினும் துண்டு சீட்டை பார்த்து தான் பேசுவாரா ?’’ என பலவாராக கிண்டலடிக்கப்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகத் தெரிகிறது. 

சமூக வலைதளங்களில் உதயநிதியை குறிவைத்து கிண்டலடித்து வருபவர்களுக்கு எதிராக  தி.மு.க., தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், 'சைபர் கிரைமில்' புகார் கொடுத்து வருகிறார்கள். அதிகமான புகார்களை அடுக்கடுக்காக கொடுத்து, எதிர் கருத்து பதிவு செய்பவர்களின்  சமூக வலைதள பக்கத்தை, முடக்கி வருகிறார்கள்.

 

உதயநிதியை கிண்டலடித்து பதிவிடுபவரா நீங்கள்... அடுத்து உங்களது சமூக வலைதளப் பக்கங்களும் முடக்கப்படலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close