அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு..? தெறிக்க விடும் எடப்பாடி... தினகரன் அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Oct, 2018 02:09 pm
do-not-publish-aiadmk-ammk-join-edappadi-to-be-stunned-dhinakaran-shocked

பாஜகவுக்கு சில விஷயங்களில் பணிந்து நடக்கும் எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை துணிவுடன் மறுத்து விடுகிறார் எனக் கூறப்படுகிறது.

அ.தி.மு.கவுடன், அ.ம.மு.கவை இணைப்பது குறித்து சிறையில் இருக்கும் சசிகலா எடப்பாடியை அனுசரித்து போகுமாறு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் மனைவி, சசிகலா தரப்பை சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. தினகரனுக்கு கூடும் செல்வாக்கை மனதில் வைத்து பாஜக இதற்கான முயற்சியை எடுத்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அ.தி.மு.க செய்திப்பிரிவில் இருக்கும் ஒருவர் நம்மிடம்,  ’’டெல்லி செல்லும் முன் கடந்த 5ம் தேதி ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த இணைப்புக்கு திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்து விட்டார். முன்னதாகவே, இரு அணிகள் இணைப்பு குறித்து  எடப்பாடியின் நிலைப்பாட்டை அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார் தினகரன் எடப்பாடி இணைப்புக்கு சம்மதம் கூறமாட்டார் என்பதை தெரிந்து கொண்டார். அதன் பிறகே இதனை மனதில் வைத்து ஓ.பி.எஸ் தன்னை மறைமுகமாக சந்தித்ததாக டி.டி.வி.தினகரன் மீடியாக்களிடம் கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.

 

இணைப்பு குறித்து பேசப்படும் என்பதால்தான் ஆளுநரையும், மோடியையும் சந்திக்கச் சென்றபோது ஓ.பி.எஸை அழைத்துச் செல்லவில்லை. 
தினகரனுடன் இணைய மறுக்கும் காரணத்தையும் எடப்பாடி கூறியுள்ளார். ஜெயலலிதா இருந்த காலத்தில் டி.டி.வி.தினகரனை  நெருங்க விட்டதில்லை. அவருக்கே சில துரோகங்களை செய்தவர் டி.டி.வி.தினகரன். இரு கட்சிகளையும் இணைத்தால், கட்சியை மொத்தமாக அவர் வசம் கொண்டு வந்துவிடுவார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யார் வேண்டுமாலும் அ.தி.மு.கவில் வந்து இணையட்டும்.

ஆனால், தினகரனை சேர்க்கும் எண்ணம் இல்லை. இடைத்தேர்தலில், தி.மு.க-வை விட 13 சதவிகித வாக்குகளை அதிகமாகவே அ.தி.மு.க பெற்றிருந்தது. இதன் மூலம் அதி.மு.கவின் செல்வாக்கு குறையவில்லை. டி.டி.விக்கு வாக்களித்தவர்கள் தி.மு.வினர்தான். ஆகையால், தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். எனவே, அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்புக்கு அவசியமில்லை’ எனக்கறாராக கூறிவிட்டார் எடப்பாடி. இந்த விஷயத்தை டெல்லியில் மோடியை சந்திக்கும்போதும் தெளிவு படுத்தி இருக்கிறார். ஆனாலும், இரு அணிகளையும் இணைக்க பா.ஜ.க மேலிடம் முடிவெடுக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார் அவர்.  

இதனையொட்டியே, நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, எல்லோரும் எதிர்ப்புத் தெரிவிக்க டி.டி.வி.தினகரன் மட்டும் ‘’கைதை வரவேற்பதாக’ அறிவித்தார். இதன் மூலம் ஆளுநர், பாஜக-வுக்கு ஆதரவாக இருப்பதாக தன்னை காட்டிக்கொள்ளவே இப்படியொரு அறிக்கையை அவர் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைக்க எக்காரணம் கொண்டும் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்க மாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close