எடப்பாடி மனைவி மூலம் சசிகலாவிற்கு தூது..? டி.டி.வி.தினகரனின் அடுத்த அதிரடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Oct, 2018 05:07 pm
edappadi-wife-to-sasikala-meet-t-t-v-dhinakaran-next-action

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது மனைவி ராதா மூலம் சசிகலாவை சந்திக்க தூதுவிட்டதை டி.டி.வி.தினகரன் அடுத்து வெளிப்படுத்த உள்ளார் என அ.ம.மு.க நிர்வாகிகள் கூறுகின்றனர். 

அ.தி.மு.க-வில் இருக்கும் சிலர் ரகசியமாக தன்னை சந்திக்க முயன்ற தகவல்களைக் கூறி அதிரவைத்து வருகிறார்  அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை ரகசியமாக சந்தித்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் டி.டி.வி.தினகரன். அத்தோடு மீண்டும் தன்னை அவர் சந்திக்க முயற்சி செய்ததாகவும் வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தார். 

அந்த ரகசிய சந்திப்பை ஓ.பன்னீர்செல்வமும் ஆமோதித்தார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை சந்தித்ததாக சில தினங்களுக்கு முன் கூறி மீண்டும் அதிர வைத்தார். ‘விஜயபாஸ்கர் என்னைச்  சந்தித்தது உண்மை. நடைபயிற்சியின்போது இருவரும் சந்தித்து கொண்டோம். அப்போது சில குறைகளை தெரிவித்தார். அதை என்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் இரட்டை வேடம் போடாதீர்கள் என்றுதான் கூறினேன்’’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அடுத்து தம்பித்துரை சசிகலாவை சந்திக்க தூதுவிட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். ’சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க பாராளுமன்ற துணை சபாநாயகர் , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டார்.  ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்திருக்கிறார்.  இதையடுத்து தினகரனிடம் பேசிய தம்பிதுரை, இரவில் வந்து சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காலையில் என்னை சந்திக்க வாருங்கள். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகள் தன்னை சந்திக்க வந்ததாக திடீர் குண்டுகளை வீசி வருகிறது டி.டி.வி.தினகரன் தரப்பு.

 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மனைவி ராதா- சசிகலாவை ஒரு முறை சந்தித்ததையும், மர்றொரு முறை தூது விட்டதாகவும் அடுத்த அதிரடிக்கு டி.டி.வி.தினகரன் தயாராகி வருவதாக கூறுகிறார் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர். ’’நடராஜன் இறந்தபோது சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா. அப்போது அரசியல் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.

பாஜக-வின் மத்திய அரசால் ரெய்டு நடவடிக்கைகளில் எடப்பாடி உறவினர்கள் சிக்கியபோது, எடப்பாடி மனைவி ராதா இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவைச் சந்தித்து சசிகலாவிடம் சமரசம் பேச தூது விட்டுள்ளார். இந்த விவகாரங்களை டி.டி.வி.தினகரன் அடுத்து வெளிப்படையாகப் பேசி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகிறார்’’ என்கிறார் அவர். 

இன்னும் யார் யாரெல்லாம் சந்தித்ததாகவும், தூது விட்டதாகவும் தினகரன் தரப்பு அதிரடி காட்டப்போகிறதோ..?

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close